
TK Mutation என்னும் Telekinesis பற்றிய எண்ணகரு முதன் ஆழமாக முதலில் Looper என்னும் Hollywood திரைப்படத்தில் சொல்லப்பட்டது. Time Travel பற்றி ஆழமாக சொல்லும் அப்படத்தில் கதாநாயகனின் இளமை பருவம், மற்றும் அவனது நண்பர்கள் சில மூலம் இது காட்டப்படுகிறது. அந்தரத்தில் நாணயத்தை மிதக்க செய்வதில் இந்த Tk Mutation பயன்படுகிறது. இதை விட பல படங்களில் இது கிளையாக வந்து இருக்கின்றது. இது பற்றிய தொகுப்பை இங்கு காணலாம். Chronicle என்ற படம் முழுவதும் இத்திறனை கொண்ட 3 சிறுவர்கள் பற்றியது.
Telekinesis பொதுவாக பரவலாக Psychokinesis என அறியப்படுகிறது. Psychokinesis to refer to using the power of the mind to cause the movement of matter at a distance. சுருக்கமாக சொன்னால் மன அலைகள் மூலம் பௌதிக பொருட்களை அசைத்தல் எனலாம்.

இதன் மூலம் move, lift, agitate, vibrate, spin, bend, break, impact ஆகியவை செய்ய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படை மன அலைகளை ஒன்று திரட்டி மன வலிமையால் சடப்பொருளின் அணுக்களின் அதிர்வை மாற்றி மேற்கூறிய விடயங்களை நிகழ்த்தல் ஆகும். இதை செய்பவரின் மனம் கட்டாயம் அமைதியான நிலையில் இருக்க வேண்டும். அதை விட முக்கியம் நீங்கள் உள ரீதியில் களைப்படையும் போது உடனடியாகவே TK mutation இனை கை விட வேண்டும். ஏன் எனில் இது கடவுள் சம்பந்த பட்டதோ மாய மந்திரமோ இல்லை. மாறாக உடல் வலிமை, மன வலிமை சம்பந்த பட்டது.
இத்திறமை உள்ளவர்கள் மட்டுப்படுத்திய நிபந்தனையில் இதை செய்து காட்டினால் லட்சக்கணக்கான பணத்தை பரிசளிக்க பல நிறுவனங்கள் உள்ளன. இது வரை எவரும் இதை பெறவில்லை என்பது ஆச்சரியமான விடயம்.
கரண்டியை பார்வையால் வளைத்தல், கதிரையை தூக்குதல் போன்ற TK நிகழ்வுகள் பற்றி youtube இல் நீங்கள் காண முடியும். பொதுவாக ஒருவர் தனது மூளையின் 10% தை பயன்படுத்தும் போது TK mutation இல் 90% வரை பயன்படுத்தப்படுவதாக சொல்கிறார்கள்.
உலகில் குறிப்பிட தக்க அளவு சிறு சதவீதத்தினர் இத்திறனை பெற்று இருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. நீங்கள் கூட இத்திறனை பெற்ற ஒருவராக இருக்க கூடும்.
மறைந்த பிரபல Magician சாய் பாபா கூட இத்திறனை கொண்டவர் என சொல்லப்படுகிறது. இதை பற்றி இங்கு காணலாம்.
தவறாக விளங்கப்படும் சில சந்தர்ப்பங்கள்:
சில சமயம் சில பௌதிக நிகழ்வுகள் TK என பலர் நம்புகிறார்கள். இன்னும் பல நிகழ்வுகள் அப்பட்டமான கண்கட்டி வித்தை. சில உதாரணங்கள்-
- பாடி கண்ணாடி குவளையை உடைத்தல் - பரிவு பற்றி படித்த 10 வயது பிள்ளை கூட இதை பற்றி அறியும்.
- மனிதர்களை துண்டாக்கி மீள ஓட்டுதல் - Magic
- வெற்று coke can இனை விரிய வைத்தல்.
இப்படி இன்னும் பல. உண்மையில் இதை எவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியுமா? இதற்காகவே ஒரு தொலைக்காட்சி தொடர் உண்டு. இங்கு பல magic செய்கைகள் எப்படி செய்யப்படுகின்றன என தெளிவாக சொல்கிறார்கள்.. நீரில் நடப்பது முதல் நடு மைதானத்தில் யானையை கொண்டு வருவது வரை. நீங்களும் விரும்பினால் இதன் தினசரி தொகுப்பை youtube இல் சென்று பாருங்கள் - youtube.com/results.