Home » » அன்னையர் தினமும் கூகுளும் - Mother's Day with Google


Updated**

அன்னையர் தின Doodle
இதன் சிறப்பே, இந்த டூடுலில் சில தேர்வுகள் மூலம் நீங்கள் 27 விதமான அழகிய Doodle களை உருவாக்க முடிகின்றமை தான்..



இதன் மூலம் உருவாக்க கூடிய சில Doodles:

Mother's Dayஅன்னையர் தினம் நாட்டுக்கு நாடு வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாட்டுகளில் ஒவ்வொரு May மாதமும் 2'ம் ஞாயிற்று கிழமை கொண்டாடப்படும். அந்த வகையில் 2013.05.12 நாமெல்லாம் அன்னையர் தினம் கொண்டாட போகிறோம். நாம் கொண்டாடுகிறோமோ இல்லையோ, இந்த வானொலிகள் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் கேலி கூத்தாக்கி விடுவார்கள். அதிலும் சினிமா நட்சத்திரங்களை பிடித்து வர, அவர்களும்   ஏதோ நோபல்பரிசை வாங்கி தன் தாயை பெருமை படுத்திய கணக்கில் பேட்டி கொடுப்பார்கள்.


இதிலும்  Sooriyan FM,  அன்னையர் தினத்துக்கு  ஒரு கிழமை முதலே விளம்பரம் போட தொடங்கி விடுவார்கள். அன்னையர் தினம் என்று கேட்டால் தெரியும்.  காலை 6 மணி முதல் இரவு 10 மணி அனைத்து நடிக நடிகைகளையும் தொலைபேசியில்  அழைத்து வந்து  புலம்ப வைத்து விடுவார்கள்.

"நான் தான் உங்க ஸ்ரேயா  பேசிறன். நான் எங்கமாவுக்காக  Pray பண்றான்.. அப்ப நீங்க?"   இப்படி நகைச்சுவையாக பேசி கேட்கும் எங்களை வீட்டில் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி விடுவார்கள்.

சரி இதெல்லாம் எதற்கு சொல்கிறேன்.? நேற்று Google, அன்னையர் தினத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது. நானும் ஏதோ புதிதாக இருக்கும் என்று ஓடோடி சென்று பார்த்தது...

சென்றது தான் தெரிந்தது... அவர்கள் அன்னையர் தினம் என்றால் எப்படி Google Products மூலம் அதை கொண்டாடலாம் என்று ஒரு விளக்கமே கொடுத்து இருந்தார்கள்.. என்றாலும், அதில் பிடித்த ஒன்று அவர்களின் Video தான். அழகான தொகுப்பாக நேர்த்தியாக edit செய்யப்பட்டு இருந்தது.

நீங்களும் விரும்பினால் Google இன் அன்னையர் தின பக்கத்துக்கு இங்கே google.com/mothersday செல்லுங்கள்.
அன்னையர் தினம் பற்றி விக்கியில் காண wikipedia.org/Mother's_Day



இன்றில் இருந்து Disqus Comment Box தானாக தோன்றுவது நிறுத்தப்பட்டு விட்டது. இனி நீங்கள் கருத்துரைகளை இட அல்லது ஏனையோரின் கருத்துரைகளை வாசிக்க ஒவ்வொரு பதிவின் முடிவில் உள்ள Open Comment Box என்ற Button மூலம் திறக்க வேண்டி இருக்கும். இம்மாற்றத்துக்கு காரணம் மெதுவான இணைய இணைப்பில் page load  ஆகும் போது Comment Box பலருக்கு திறப்பதே இல்லை. அத்துடன் Page Download time பாதிக்கப்படுகிறது.
இந்நடைமுறை Mobile இலும் இயங்கும் - தேவையான போது மட்டும் உங்கள் தெரிவாக...

அத்துடன் கணணிக்கல்லூரி முழுவதுமாக Responsive Design க்கு மாறி விட்டது. அது மட்டும் அல்ல Page Download வேகம் இயன்றளவு அதிகரிக்க வழிசமைக்கப்பட்டுள்ளது. Mobile, Desktop என இரண்டு வழியில் பார்க்கும் அனைவருக்கும் இனி ஒரே Design தான். என்றாலும் Mobile இல் வாசிக்கும் உங்களுக்கு சில அவசியமற்ற பகுதிகள் தோன்றாது - உங்கள் bandwidth இனை சேமிக்கும் ஒரு ஏற்பாடு.



2013.05.4 சில Email மூலம் பதிவுகளை பெறுபவர்களுக்கு துரதிஷ்டவசமாக ஒரே பதிவு 4 தடவை API  இல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனுப்பப்பட்டு விட்டது. தவறுக்கு மனம் வருதுகிறோம்.


அடுத்து கணணிக்கல்லூரியின் இயங்கு தளம் - இன்று வரை Google தரும் Blogger தான் . அண்மையில் ஒரு இணைய தளம் Wordpress க்கு மாறி இருந்தார்கள். Wordpress தான் உண்மையில் சிறந்த platform. பல Plugins உதவியுடன் இணையத்தையே ஆள  முடியும்.  ஆனால் அதை நிர்வகிப்பது கத்தி முனையில் நடப்பதை போன்றது. Database, Backup, Cache, Antivirus...  இப்படி எண்ணற்ற விடயங்கள்... அத்துடன் self hosting க்கு மேலதிக பணம் கூட கட்ட வேண்டும்..  இதனால் தான் இன்றுவரை சுதந்திரமான Blogger ல் இயங்குகிறோம்...