Home » » Wordpress - Self Hosting இல் ஓர் அறிமுகம்

Wordpress பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. CMS என சுருக்கமாக அழைக்கப்படும் Content Management System இல் இதுவும் ஒன்று.பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்ட wordpress என்பது wordpress.com இல்  subdomain மூலம் பயன்படுத்த கூடிய சேவையே ஆகும். ஆனால் இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த சேவையை விட Blogger எவ்வளவோ மேலானது.  இப்போது பார்க்க போவது self hosting wordpress சேவை. இப்பதிவின் பின்னர் முதலாவது உங்கள் Wordpress தளத்தை உருவாக்க முடியும்.

Wordpress - Self Hosting நன்மைகள் என்ன?


சுருங்க சொன்னால் மட்டுப்பாடுகள் அற்றது. இதுவரை wordpress இனை sub domain இல் பாவித்தவர்களுக்கு அதன் கஷ்டங்கள் தெரியும்.
Wordpress - Self Hosting  இல்  மட்டுமே million கணக்கான Themes, Plugins களை பாவிக்க முடியும். Plug ins மூலம்  இணையத்தில் செய்ய முடியாத எதுவும் இல்லை. இவை இலவசமாக கிடைப்பது ஆச்சரியமே!
  • No custom themes or plugins
  • No PHP/CSS customization
  • Monetization (through advertising, affiliate links, etc) is not allowed
  • WordPress.com will run their own advertising on your site
  • No custom analytics

Wordpress இயங்க அடிப்படை என்ன?


  1. Server
  2.  MySQL Database

Server:

 சொந்தமாக WordPress இங்கிருந்தே இயங்க வேண்டும். பொதுவாக பல இலவச Free hosting சேவைகள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அனைத்தும் ஒவ்வொரு மட்டுப்பாடுகளை கொண்டவை. 

Data Base: 

Word press இல் நீங்கள் வழங்கும் பதிவுகள் உட்பட அனைத்து தகவல்களும்  இங்கே தான் சேமிக்கப்படும். இவற்றை தனியாக பெற வேண்டியது இல்லை. Hosting சேவையை பெரும் போதே கூடவே MySQL கிடைக்கும்.


கீழே மிக இலகுவாக ஒரு wordpress self hosting தொடங்குவது பற்றி பார்ப்போம்.
இங்கே nivacity என்னும் free hosting ன் மூலம் இதை செய்கிறோம். இதுவே இணையத்தில் உள்ள சிறந்த free hosting provider.

ஒவ்வொரு படிக்கும் நீண்ட விளக்கங்கள் அவசியம் இல்லை. நீங்களாகவே நாளடைவில் புரிந்து கொள்வீர்கள். இவற்றை ஒரு தடவை வாசித்த பின்னர் கீழ் உள்ள video வில் உள்ள செய்முறையை பார்த்த பின்னர் நீங்கள் ஆரம்பிப்பது இலகுவாக இருக்கும்.


  1.  முதலில் NivaCity தளத்தில் சென்று ஒரு கணக்கை ஆரம்பியுங்கள் www.nivacity.com
  2. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் உறுதிப்படுத்தும் Link இனை click செய்து கணக்கை Active செய்யுங்கள்.
  3. உங்களுக்கு என்று ஒரு Sub domain இனை create செய்யுங்கள். (tamilccblog.likama.in).
  4. தேவைப்படும் போது சொந்தமாக வாங்கி இணைக்க  முடியும்.
  5. நீங்கள் create செய்த subdomain இல் switch செய்து கொள்ளுங்கள்.
  6. Auto installer பகுதிக்கு செல்லுங்கள். இங்கே பல Auto installer Scripts உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
  7. முதலாவதாக உள்ள WordPress இனை தெரிந்து கொள்ளுங்கள்.
  8. இதில் நீங்கள் நிறுவ விரும்பும் directory இனை குறிப்பிடுங்கள். நேரடியான இடம் என்றால் வெறுமையாக விட்டு உங்கள்  WordPress க்கு பயன்படுத்த போகும் user name, password கொடுத்து install செய்து கொள்ளுங்கள்.
  9. இப்போது serverஇல் Word Press நிறுவப்படும். கூடவே MySQL கணக்கும் நிறுவப்படும்.
  10. நீங்கள் நிறுவிய directory உள் /wp-admin க்கு நேரடியாக செல்லுங்கள். ( + user name) - இதன் போது காண்பதே உங்கள் WordPress Dashboard.
  11. இடது பக்கம் உள்ள menu க்களில் இருந்து உங்களுக்கு தேவையானதை பெற்று கொள்ளுங்கள்.


இனி என்ன? உங்கள் பதிவுகள் wordpress இலும் இடம் பெறட்டும்
இந்த படம் உங்களுக்கு உதவலாம்: copyblogger.com/images/wordpress-setup.png

உங்களுக்கு இதுவே பிடித்து இருந்தால் உங்கள் பிளாக்கரில் உள்ள பதிவுகளை இங்கே பிரதி செய்து கொள்ள முடியும். இன்னும் ஏராளமான வசதிகள் இங்கே கிடைக்கின்றன.

உயரிய பாதுகாப்புக்களை செய்ய அதிகமாக plugins இலவசமாக கிடைக்கின்றது.

Nivacity க்கு பதிலாக பல கட்டணம் செலுத்தும் சேவைகள் உள்ளன. Godaddy, Bluehost... இவற்றிலும் Wordpress இவ்வாறு நிறுவ முடியும்.wordpress இலவசமானதே ஆகும். hosting க்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.



தொடர்ந்து wordpress இல் உள்ள plugins, Themes மற்றும் ஏனைய CMS, scripts தொடர்பாக பார்க்கலாம்.