Home » , » Do Not Track Me ! உங்கள் தகவல்களை இணையத்தில் மறையுங்கள் !

DNT1Windows 8 வரவுக்கு சில காலம் முதல் Do Not Track Me என்ற சொல்லாடல் இணையத்தில் அதிகளவு அடிபட்டது. ஆனால் இன்று சற்று குறைந்து விட்டது. இந்த பதிவின் மூலம் Do Not Track Me என்றால் என்ன? இதன் நன்மைகள் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது? இதன் மூலம் உங்கள் பாதுகாப்பு எவ்வாறு இணையத்தில் உறுதி படுத்த படுகிறது? இதன் எதிர் காலம் என்ன? என்பவை தொடர்பாக சுருக்கமாக பார்ப்போம்.



 Do Not Track Me

இதை பற்றி பார்க்க முதல் ஒரு உதாரணம். நீங்கள் Google இல் வாசனை திரவியங்கள் பற்றி தேடுகிறீர்கள்.அதன் போது  உங்களுக்கு வாசனை திரவியங்கள் பற்றிய விளம்பரங்கள் தேடல் முடிவுகளுடன் இணைத்து தோன்றும். தேடும் போது வருவது ஏற்று கொண்டாலும், நீங்கள் வேறு ஒரு இணைய பக்கத்தை பார்க்கும் போதும் அங்குள்ள Adsense மூலம் வாசனை திரவியம் வாங்கவில்லையா போன்ற விளம்பரங்கள் வருவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

சில தினங்களுக்கு முதல் தேடியதை இப்போது எப்படி இங்கு ஞாபகம் வைத்து இருக்கிறீர்கள் என்று ஜோசிக்கலாம். அல்லது என்னில் இவ்வளவு அக்கறையாக Google  போகும் இடமெல்லாம் கடை போட்டு விற்கிறார்கள் என்று பெருமைப்படலாம்.

 இப்போதெல்லாம் கூகிள் Algorithms மிக துல்லியமாக செயற்பட்டு நீங்கள் வாசனை திரவியம் வாங்க போகிறீர்களா? இல்லை விற்க போகிறீர்களா என்று பார்த்து பொருத்தமான விளம்பரத்தை காட்டும்  அளவுக்கு மேம்படுத்த பட்டுள்ளது. அதை விட நீங்கள் வாசனை திரவியம் தொடர்பான தீமைகள் பற்றி தேடினாலும்  Algorithm துல்லியமாக கண்டு பிடித்து இதை பற்றியே ஒன்றும் தெரியாதது போல  அல்லது புற்றுநோய் பற்றிய விளம்பரத்தை காட்டி எமக்கு நல்ல பிள்ளையாக இருக்கும்.

இதை விட IP யை பதிவு செய்தல்,  Google Analytics, Woopra போன்ற  கண்காணிக்கும் சேவைகள் மூலம் நீங்கள் எங்கிருந்து வந்து எதை செய்கிறீர்கள் என்று அறியும் முறைகள கூட ஆபத்தானவை. வரும் காலத்தில் உங்களுக்கு என்று தனியான IP கிடைக்கும். அதன் பின்னர் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை மிக துல்லியமாக கண்காணிக்க முடியும்.

Do Not Track Me ! என்றால் என்ன?


நீங்கள் தேடும் முடிவுகள், உங்கள் இணைய நடத்தைகளை இரெண்டாம் தரப்பு கண்காணிப்பதை தடுக்கும் முறை.இது தொடர்பாக Wikipedia இல் காணுங்கள்.

Do Not Track Me யாரெல்லாம் பயன்படுத்தலாம்?


இணையத்தை பாவிக்கும் தனிபட்ட தகவல்களை  பாதுக்காக விரும்பும் ஒவ்வொரு சுதந்திர இணைய பாவனையாளரும் நிச்சயம் பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்துவதால் எந்த  தீமையும் இல்லை.


Do Not Track Me  எப்படி பயன்படுத்துவது?


இது இப்போது ஒவ்வொரு இணைய உலாவியிலும் பல விதமாக  வருகிறது. இதை setting செய்து முடிப்பது கொஞ்சம் கடினமானது.

  • Internet Explorer இல் setting பகுதியில்  மிக இலகுவாக செய்யலாம். மேலே படங்களை பாருங்கள். என்றாலும் இதற்கும் மென்பொருள் உள்ளது .
  • Chrome, Firefox  இவற்றில் Settings  பகுதியில் இவை கிடைத்தாலும் அவ்வளவாக இயங்குவது இல்லை. இவற்றை இலகுவாக இலவசமாகவே Extensions மூலம் Do not track me வசதியை பெறலாம்.
  1. Chrome Users இங்கே தரவிறக்குங்கள் : google.com/webstore
  2. Firefox Users இங்கே தரவிறக்குங்கள் : Add ons page
  3. Internet Explorer users:  Software


இதை தரவிறக்குவது, மற்றும் இது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பாக இந்த தமிழ் காணொளியில் காணுங்கள்.



இதன் நன்மைகள் என்ன? 


Video பார்த்த போது விளங்கி இருக்கும். இணையத்தில் உள்ள 600 க்கும் அதிகமான விளம்பர சேவைகள், tracking சேவைகள், Analytics சேவைகள் போன்றவற்றிடம் இருந்து உங்கள் தனிப்பட்ட விடயங்ககளை பாதுகாத்தல். உங்கள் இணைய சுதந்திரத்தை முடியுமான அளவு பாதுகாத்தல் 

இதன் எதிர் காலம் என்ன?


இதை பயன்படுத்துவது விளம்பர நிறுவங்கள், பாதுகாப்பு பிரிவுகளுக்கு பலத்த பிரச்சனையை கொடுக்கிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும் Microsoft முதல் Google வரை இணங்க வில்லை.