Home » , » Virtual Clone Drive என்றால் என்ன? முக்கியத்துவம் + பயன்பாடு

Virtual Clone Drive என்றால் என்ன?, Virtual Clone Drive இன் முக்கியத்துவம் என்ன? இதை எவ்வாறு பயன் படுத்துவது தொடர்பாக இந்த பதிவில் காணுங்கள். அதற்கு முதல் .iso என்னும் வகை files தொடர்பாக அறிந்து இருப்பீர்கள். சுருக்கமாக சொன்னால் iso வகை files இனை திறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் Virtual Clone Drive.




Disk Image file என்றால் என்ன?


ஒரு இருவட்டின் வடிவம் மாறாது அவ்வாறே அதில் உள்ள தகவல்களை கணனியில் சேமிக்கும் ஒரு வழி. பொதுவாக .iso வகையை சார்ந்தவை. இதை விட .Bin னும் சில சந்தர்ப்பங்களில் இந்த VCD Disk வகையை கொண்டதாக அமையும்.  பெரும்பாலும் Disk image களை Torrent இல் பெற்று இருப்பீர்கள்.
இவ்வகை files இனை மிக இலகுவாக எந்த Disk Writing softwares  மூலமும் மீள இறுவட்டில் பதியலாம்.  இவற்றை மீள இறுவட்டில் பதியாது கணனியில் வைத்து திறக்க பல வழிகள் உள்ளன. Windows 8 இல் இதை சாதரணமாக திறக்க வழி உள்ளது. வேறு OSஇல் Winzip , WinRar போன்றவற்றை பயன்படுத்தி விரிக்கலாம். இயக்க முடியாது. இவை பற்றி இங்கு அவசியம் இல்லை.


Virtual Clone Drive என்றால் என்ன?


CD, DVD,  Blu-Ray என எந்த வகை disk களின் image களை CD, DVD,  Blu-Ray  Disk போலவே  திறக்க பயன்படும் மென்பொருள்.

Virtual Clone Drive இன் நன்மைகள் என்ன?


சுருங்க சொன்னால் இறுவட்டில் உள்ளது போலவே கணணி வன்தகட்டில் இருந்தும் இறுவட்டின் பிரதியை இயக்குவது.

இதன் பிரதான நன்மை உங்கள் CD / DVD Rom (Drive) இனை பாதுகாப்பது ஆகும்.
உதாரணமாக ஒரு 5 படங்கள் உள்ள DVD யில் படம்  பார்த்தால்  10 மணி நேரம்  (விட்டு விட்டு) உங்கள் DVD drive இயங்கும்.

 இதனால் அதில் உள்ள laser diode  விரைவில் சேதம் அடையும்.  படங்களை Select all செய்து பிரதி எடுத்தால் துண்டு துண்டாக வரும். இதை தடுத்து குறித்த DVD யை பிரதி செய்து மீள அவ்வாறே இயக்க VCD பயன்படும். இதே போல பல Games களை Drive இல் இட்டு விளையாடுவது Disk விரைவில் பழுதடைய வழி செய்யும்.

இதை விட

  1. இறுவட்டில் உள்ளவற்றை பிரதி செய்து எடுத்து வைத்து மீள இயக்குவதை  விட image ஆக மாற்றி மீள Disk போலவே பாவிக்க முடியும்.
குறிப்பாக Audio CD க்களை Rip செய்து பிரதி எடுப்பதை விட image ஆக மாற்றி இசைப்பது சுலபம்.

  • தானாக இயங்க கூடிய Boot Disks களை image ஆக மாற்றுவதால் மாத்திரம் மீள தானாக இயங்க செய்ய முடியும்.
பொதுவாக இயங்கு தளங்களை பிரதி செய்ய பயன்படும் முறை.


Disk Image file எவ்வாறு உருவாக்குவது?


நிச்சயம் நீங்கள் எதாவது ஒரு Writer software பயன்படுத்துவீர்கள். Eg: Nero. இவற்றில் மிக இலகுவாக disk image உருவாக்க முடியும். create iso image from Disk என்ற option மூலம் இலகுவாக Disk image உருவாக்க முடியும். இதை விட இலவசமாகவும் பல கிடைக்கின்றன:

Magic ISO 
Type: Free 
Download link: http://www.magiciso.com/download.htm 

ISO Recorder 
Type: Free 
Download link: http://isorecorder.alexfeinman.com/isorecorder.htm 



Disk Image file இயக்குவது எப்படி?



இவற்றை இயக்கவே VCD தேவை. பல VCD கள் இலவசமாக கிடைக்கின்றன.




using virtual clone drive


. இதை இயக்க குறித்த Disk Image  இனை VCD மூலம் திறந்தால் My computer இல் புதிய DVD Drive ஒன்றில் DVD இருப்பது போல இருக்கும்.


using virtual clone drive

இனி நீங்கள்  நாள் முழுக்க இயக்கினாலும் உங்கள் (Physical ) DVD Drive குறிப்பாக அதில் உள்ள laser பாதுகாப்பாக இருக்கும், இன்றில் இருந்து DVD drive இல் இருந்து நேரடியாக  படம் பார்க்கும் , Game விளையாடும் செயல்களை தவிர்த்து Disk image களாக மாற்றி செய்யுங்கள்.