Home » , » Google Drive உதவியுடன் விரைவாக விரும்பியதை தரவிறக்க - Save to Drive Extension

Google தரும் சேவைகளை பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை. Google chrome மற்றும் Google Drive பயன்படுத்துபவர்களுக்கான ஒரு அவசிய  Extension  பற்றி பார்ப்போம். ஆயிரக்கணக்கான  Extensions,  Google chrome பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கிறது.  அவரில் மிகவும் அவசியமான ஒரு Extension  தான் Save to Drive. இதன் மூலம் என்ன செய்யலாம்? இதன் பயன்கள் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது? இவை தொடர்பாக இப்பதிவில் காணுங்கள்.



 இந்த Extension  மூலம் நீங்கள் Chrome இல் காணும் எவற்றையும் நேரடியாக உங்கள் Google drive  க்கு தரவிறக்கலாம். பின்னர் Google Drive இல் இருந்து விரைவாக கணனிக்கு Google Drive Sync மூலம் அல்லது இணையத்தில் இருந்தே நேரடியாக தரவிறக்க முடியும். இது HTML5  உடன் பூரணமாக ஒத்திசைவது மிகப்பெரிய சிறப்பு எனலாம்.

இதன் பயன்கள்  என்ன?


நீங்கள் ஒரு காணொளி பார்க்க போகிறீர்கள் - Download செய்ய போகிறீர்கள். இப்போது உங்கள் இணைய வேகம் குறைவு எனில் தடங்கல் ஏற்றப்படும். சில சமயம் இடையில் நின்று விடும். மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். 
ஆனால் இந்த Extension  மூலம் எதை தரவிறக்க வேண்டுமோ அதை Right Click  செய்து சில நொடிகளில் Google Driveஇல் சேமிக்கலாம். பின்னர் அசுர வேகத்தில் தடங்கல் இல்லாமல்  வழமையான முறையில் கணனிக்கு மாற்றி கொள்ளுங்கள். 

சுருங்க சொன்னால், நீங்கள் தோளில் சுமைய தூக்கி களைத்து போய் வருவதுக்கு பதிலாக ஒரு வண்டியில் ஏற்றி விட்டால் வீட்டுக்கு கொண்டு வந்து இலவசமாக பறிப்பது போல 

இதை Chrome இல் தரவிறக்க : Extension Home Page

இதை நிறுவுவது, பயன்படுத்துவது தொடர்பான விளக்கங்களை இந்த தமிழ்  வீடியோவில் காணுங்கள்.

 (உங்களால் இந்த கானோளியின் பின்னணி இசை எந்த திரைப்படத்தில் வந்தது என்று இனம் காண முடிகிறதா? முடிந்தால் Commentஇல் சொல்லுங்கள் )