Home » , » Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?

Nobelprize.orgNobel Prize பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அறிவியல் துறையில் முன்னணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்புக்களை கௌரவிக்கும் விதமாக Dynamite வெடி பொருளை உலகுக்கு அளித்து அதில் கிடைத்த பெரும் தொகையான பணத்தை வருடம் தோறும் வழங்குமாறு செய்தவர் Alfred Nobel ஆவார். வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் இந்த விருது ஏனைய விருதுகளில் இருந்து முக்கியம் பெறுகிறது. இவர்கள் தமது இணைய பக்கத்தில் சாதாரண மக்களும் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை கற்க வேண்டுமென்ற நோக்கோடு பல online games களை தமது தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இவை தொடர்பாக கொஞ்சம் பார்ப்போம்.



 இவர்கள் தமது Web site இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:
"You don't have to be a genius to understand the work of the Nobel Laureates. These games and simulations, based on Nobel Prize-awarded achievements, will teach and inspire you while you're having FUN!"

இதில் இருந்தே விளங்கி இருக்கும். அனைவரும் technology பற்றி அறிய வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டே இதை அறிமுக படுத்தி உள்ளார்கள்.

இங்குள்ள Games:
  1. The Blood Typing Game : Blood Group எவ்வாறு கணிக்கபடுகிறது என்பதை சொல்லும் game
  2.  The DNA - the Double Helix Game : DNA இரட்டை  கட்டமைப்பை பற்றி இலகுவாக அறிமுகப்படுத்தும் Game
  3.  The Immune System Game: நோய் எதிர்ப்பு முறை பற்றி அறிய தரும் விளையாட்டு.
  4. The Control of the Cell Cycle Game: உடலில் கலங்கள் புதுப்பிக்கப்படும் செய்முறை 
  5. The Pavlov's Dog Game:  நாய் வளர்ப்பு 
  6. The Electrocardiogram Game: ECG எடுக்கும் முறையை அனைவருக்கும் கற்று தரும் விளையாட்டு
  7. The Transistor: Electronic துறையில் Transister பயன்பாட்டை சொல்லும் Game
  8. The Diabetic Dog Game: பெயரிலேயே இருக்கிறது
  9. The Split Brain Experiments Game : மூளையின் இரு அரைக்கோளங்களும் எவ்வாறு இயங்குகின்றது என்பது தொடர்பான விளையாட்டு
  10.  The Lord of the Flies Game : மற்றொன்று 


இவற்றின் சிறப்பம்சமே online இல்  வைத்தே இவற்றை விளையாட முடிகின்றமை.
மேலே உள்ளத்தில் அனைவருக்கும் பிடிக்கும் என்று கருதும் ஒரு விளையாட்டை இங்கே விளையாடி பாருங்கள்.

மேலே உள்ள அனைத்து விளையாட்டுக்களையும் விளையாட இங்கே - nobelprize.org/educational செல்லுங்கள். நிச்சயம் உங்களுக்கு அல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்கு பயன் படும்.
இதை விட பல videos மூலமும் தொழில்நுட்பத்தை பரிமாறுகிறார்கள். அவற்றையும் மேலே உள்ள இணைப்பில் காணுங்கள்.

இந்த விளையாட்டின் மூலம் இரத்தத்தின் வகையை எப்படி கண்டறிவது என்று படிப்படியாக கற்று கொள்ள முடிகிறது.