என்னை Twitter இல் பின் தொடர்ந்து தொழிநுட்ப செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Adsense தொடர்பான மாற்றங்கள்
Adsense இல் இதில் சில மாற்றங்கள் எப்போதோ நிகழ்ந்தவை. இப்போது உத்தியோக பூர்வமாக வெளியிட்டு உள்ளார்கள்.
முக்கியமான மாற்றம் Adsense For Host க்கு பெற்றால் வேறு தளங்களுக்கு பயன்படுத்த அவர்கள் அனுமதி தேவை. உதாரணமாக நீங்கள் உங்கள் வலைபூவிற்கு (www.hello.blogspot.com) Adsense பெற்றால் உங்கள் வேறு ஒரு தளத்துக்கு (www.hello.com) பெற மீள அனுமதி பெற வேண்டும். நீங்கள் வலைப்பூவுக்கு சொந்த Domain வாங்கி மாற்றினாலும் மீள அனுமதி பெற வேண்டும். ஆனால் இதில் நன்மை உங்கள் சொந்த Domain க்கு Adsense மறுக்கபட்டாலும் உங்கள் Host Domain க்கு தொடர்ந்து Adsense கிடைக்கும். முதல் Blogger க்கு கிடைப்பதே அரிது- இதில் சொந்த டொமைன் தேவையா என்பது நீங்கள் நினைப்பது புரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு இங்கே
இதை விட புதிய 300 X 600 வடிவ Ad unit, மற்றும் Text ads வடிவத்தில் மாற்றம், தவறான Click களை கண்டறியும் நுட்பத்தில் புதிய படிமுறை, , appeal l form போன்றனவும் புதிய வரவுகளாகும்.
Nasa பல பூமி தொடர்பான அழகிய படங்களை வெளியிட்டது.
Nasa இரவில் பூமி எப்படி தெரியும் என்பதை satellites மூலம் photo எடுத்து மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. நீங்களும் nasa.gov இல் சென்று அழகிய பூமியை காணுங்கள். இது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இப்போது தான் பலருக்கு தெரிய வருகிறது.
Nasa தன்னுடைய Satellites மூலம் பல தசாப்தங்களாக எடுத்த பூகோள படங்களில் அழகிய தொகுப்பை pdf ஆக வெளியிட்டு உள்ளது. ஆறுகள், மலைகள், பாலை நிலங்கள் என்று அனைத்தையும் தொகுத்து சிறு புத்தகமாக இங்கே /www.nasa.gov/ வில் பெறுங்கள்.
Google Street View இல் சில புதிய இடங்கள்
கடந்த June மாதம் முதல் கனடாவை அண்டிய பகுதிகளில் உள்ள ஆர்டிக் சமுத்திரத்தில் Google street view குழுவினர் அங்குள்ள இயற்கை காட்சிகளை தமது Google map இல் இணைக்க ஆரம்பித்தனர். இப்போது இந்த திட்டம் ஓரளவு முடிவடைந்து விட்டது. அதன் இறுதியாக இப்போது பொது மக்கள் பார்வைக்கு காட்சி படுத்தி உள்ளனர். இப்போது Canada மற்றும் அதை அண்டிய பகுதிகளில் உங்களால் சுற்றி பார்க்க முடிகிறது. நீங்களும் சுற்றி பார்க்க இது தொடர்பான பதிவில் இங்கே காணுங்கள்.
சிலருக்கு அங்கே இறங்க முடிவதில்லை. ஏன் எனில் தரவிறக்க வேகம் / இணைய இணைப்பு வேகம் குறையும் போது Map load ஆவதில்லை அல்லது Satellite view க்கு தானாக மாறுகிறது. அவ்வாறானவர்கள் அங்கு சுற்றி பார்க்கும் அனுபவத்தை இங்கே இந்த காணொளியில் காணுங்கள்.
மேலும் சில தகவல்கள்
- iphone 5 இன் factory unlocked பதிப்பை உத்தியோகபூர்வமாக Apple விற்க ஆரம்பித்தது. 16GB= 670$ க்கு விற்கப்படுகிறது.
- Facebook ஒருவரின் public பதிவுகளை எவரும் பெரும் நடைமுறைக்கு Subscribe என்ற பெயரை மாற்றி twitter ஸ்டைலில் Follow என பெயர் இட்டது. இதன் முக்கிய காரணம் பலரால் இதன் நோக்கத்தை விளங்காது போனமையே ஆகும்.
- பதிப்புரிமையை காரணம் காட்டி Pirate Bay proxy severs , England இல் நிறுத்தபட்டது.
- சென்ற அக்டோபர் 26ல் வெளியான, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் உரிமங்கள் விற்பனை 4 கோடி என்ற எண்ணிக் கையைத் தாண்டியதாக, நவம்பர் 27ல் அறிவிக்கப் பட்டுள்ளது.
- Windows Xp OSன் முடிவு காலத்திற்கு இன்னும் 500 நாட்கள் கூட இல்லை. Microsoftன், OS வரிசையில், மிக அதிக காலம், 11 ஆண்டுகள், செயல்பட்ட Xp யின் பயன்பாடு முடக்கப்பட உள்ளது. வரும் 2014 ஏப்ரல் 8ல் இதற்கான இயக்க ஆதரவினை Microsoft நிறுத்திக் கொள்ளும்.
- இந்தியாவில் கடும் தொழில்நுட்ப சட்டங்களை அமுல்படுத்தும் அமைச்சரின் இணைய பக்கத்தை Hack செய்த Anonys ஒரு புகைப்படம் மூலம் நக்கலாக தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.