புதுமைகளை அள்ளித்தந்த வண்ணம் இருக்கும் Google தனது Google Map - Street View வில் இதுவரை நிலப்பரப்புக்களை சேமித்துக்கொண்டது. பல கண்டங்களை ஒன்றிணைத்தது. என்றாலும் ஈரான் போன்ற நாடுகளின் படங்களை இந்த நூற்றாண்டில் காணலாம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இப்போது விடயத்துக்கு வருவோம். Google இப்போது கடலுக்கு அடியிலும் தனது Street View சேவையை விரிவாக்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக Underwater panoramic புகைப்படங்கள் இப்போது Google map இல் இணைக்கப்பட்டு உள்ளன. அவர்களுடைய Twitter பக்கத்தில் "விரைவில் உங்களை 5 சமுத்திரங்களுக்கும் கூட்டி செல்வோம்" என்று சொல்லி இருக்கிறார்கள்.
கடல் ஆமைகள், மீன்கள் இப்படி அனைத்துடனும் உங்களால் கூடவே நீந்திசெல்ல முடியும். இங்கே நீங்களும் அவர்கள் இணைத்த படங்களை பாருங்கள். இவை அனைத்தும் Australia வின் கடற்பரப்புக்களில் எடுக்கப்பட்டவை.
Home
»
Street view
»
கூகிள் அறிமுகப்படுத்தும் கடலுக்கு அடியில் சுற்றுலா -