தமிழில் பலர் திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் எழுதுகிறார்கள். அதனால் தான் நானும் எழுதலாம் என்று இறங்கினேன். ஆனால் Call of Duty Black ops 2, Battle Field 3, Crysis 3 இப்படி எழுதினாலும் இதை விளையாடுபவர்கள் மிக மிக குறைவு. காரணம் இதை தரவிறக்க பல மாதங்கள் கூட செல்லலாம். இவை பெரும்பாலும் 3 or 4 DVD களில் வருபவை. கடையில் வாங்கினாலும் பண செலவு, அப்படியே எடுத்தாலும் i5 processers 8 GB RAM இப்படி இமாலய தேவைகளை சாதாரண மக்களின் கணணி கொண்டு இருப்பதில்லை. அதனால் தான் இப்படி சின்ன ஆனால் பிரபலமான விளையாட்டுக்களை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன்.
Bad Piggies
இது 30MB அளவே கொண்ட Angry Bird கொண்ட அனைத்து வழிகாட்டல்கள் இதிலும் அடங்கி உள்ளது. அதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை சுருங்க சொல்லின் அதில் எறியம் மூலம் பறவைகள் கவனில் கட்டி இலக்கை அடித்தோம். இதில் விதம் விதமான ஆயுதங்களை பயன்படுத்தி பன்றிகளை உருட்டி விடுகிறோம். உருட்டுவதற்க்கு ஒவ்வொரு உத்திகளை கையாள வேண்டும். வழமை போல இரு பரிமாணத்தில் வடிவமைக்கப்பட்ட இவ்விளையாட்டில் பின்னணி இசை பிரமாதம்.
இதிலும் TNT வெடிபொருள அதிக இடங்களில் பயன்படுகிறது. சிறிது மூளைக்கு வேலையும் உண்டு. இவ்விளையட்டின் குறிக்கோள் சதுரங்க பெட்டிகளை விடுவித்தலாகும். பலூனில் பறந்து செல்லாம் அல்லது கைப்பொறியால் பன்றிகளை தள்ளியும் இலக்கை அடைய முடியும்.
மொத்தத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை பொழுது போக்கிற்காக விளையாட கூடிய விளையாட்டு. Angry Bird விளையாடியவர்களுக்கு இவ்விளையாட்டில் 3 நட்சத்திரம் பெறுவது மிக இலகுவானது.
இதை தரவிறக்க:
இது கட்டணம் செலுத்தப்பட்ட வேண்டிய விளையாடு . 4.95$ என்னும் மலிவான பெறுமதியை உடையது. Trial இலவசமாக தரவிறக்கலாம்.Rovio Home Page: Here
One Click Download: Here
முழுவதுமாக விளையாட:
Download Patch: Here
எவ்வாறு பூரணமாக இதை விளையாடுவது?
கீழே உள்ள படத்தை பாருங்கள்;
G:\Program Files (x86)\Bad Piggies\Bad Piggies_Data\Managed இல் சென்று தரவிரக்கிய patchமூலமாக பூரணமாக Unlock செய்து கொள்ளுங்கள்.
விளையாடும் முறை:
இதை சொல்லி தான் தெரிய வேண்டுமா? என்றாலும் சில விளையாட்டு இடை முகங்களை காணுங்கள்.
நீங்களும் விளையாடி பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று .
இந்த விமர்சனம் பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.
இந்த விமர்சனம் பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.