Google Docs இன் வருகை பலரது தேவைகளை ஒன்றாக்கி இணைத்து குறுக்கி விட்டது. ஒன்லைன் applications பல நன்மைகளை அள்ளி வழங்கி வருவதால் பலரும் அதற்கு மாறி விட்டனர். இதற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் தனது 2013 officeஇனை இணைய இயக்கத்தை முன் நிறுத்தி வெளியிட்டமை அனைவரும் அறிந்தது. எவ்வாறாயினும் கூகிள் வழங்கும் சேவை அனைத்திலும் இருந்து மாறுபட்டது. அனைத்து கூகிள் products உடனும் இயக்கும் தன்மை வேறு எதிலும் காண முடியாத சிறப்பு. இதற்கு உதாரணமாக புதிய ஜிமெயில் தொடர்பான அறிவிப்பை கூகிள் கலண்டர் உதவியுடன் விசேட ஸ்கிரிப்ட் உதவியால் SMS மூலம் பெறக்கூடியமையை குறிப்பிடலாம். இதை விட இன்னும் பல உள்ளது. இப்போது கூகிள் டாக்ஸ் இன் ஆரம்பமாக அதன் குறுக்கு விசைகள் மற்றும் அதன் அடிப்படை தகவலகள் சிலவற்றை இங்கே காணுங்கள்.