Home » » வெளிச்செல்லும் கிளிக்களை கண்காணித்தல் - Google Analytic 6

நீண்ட காலத்தின் பின்னர் உங்களை  Google Analytic (GA) பதிவில் சந்திக்கிறேன். பலர் ஆவலுடன் எதிர்பார்க்கும்  All in One GA Script உங்களுக்கு அடுத்த பதிவில் வழங்க முடியும் என நினைக்கிறேன். இந்த பதிவு உங்கள் தளத்தில் செய்யப்படும் கிளிக்களை துல்லியமாக கண்காணிப்பது பற்றியது. இதற்கு நிச்சயம் நீங்கள் GA பயனாலராக இருக்க வேண்டும்.



இதன் நோக்கம் என்ன?


உங்கள் தளத்தில் நீங்கள் வேறு தளங்களுக்கு இணைப்பு கொடுத்து இருக்கலாம். அல்லது வேறு பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் வாசகர்கள் கிளிக் செய்து பார்வையிடுகிறார்களா என்பதை சாதரணமாக GA மூலம் பெற முடியாது. அதை தீர்க்கவே இந்த புதிய ஸ்கிரிப்ட். இதன் மூலம், உங்கள் தளத்தில் செய்யப்படும் அனைத்து கிளிக்களையும் ஒன்று விடாது கண்காணிக்கலாம்.

இதை யார் பயன்படுத்தலாம்?

Google Analytic பயன்படுத்தும் அனைவரும் பயன்படுத்தலாம்.

இதை இணைப்பது எப்படி?

கீழே உள்ள ஸ்கிரிப்ட்டை </head> ஓட்டின் மேலே உங்கள் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் இணைத்து Saveசெய்யுங்கள் .


இதில் உள்ள  முதல் வரி (jQuery) ஏற்கனவே இணைக்கப்பட்டு இருந்தால் தேவை அற்றது. அதை விடுத்து மற்றதை இணையுங்கள்.

இதன் அறிக்கையை எங்கே பெறுவது?

உங்கள் அனல்ய்டிக் கணக்கில் Content >> Event பகுதியில் இதன் விவரங்கள் இணைத்து 1 மணி நேர்த்தில் தோன்ற ஆரம்பிக்கும்.

இதன் அறிக்கை எப்படி இருக்கும்?

இதன் அறிக்கை கீழே உள்ளது போல இருக்கும்.



இதன் பயன்கள் என்ன?

உங்கள் வலைப்பூவில் உங்கள் உழைப்பு எந்தளவு மக்களை சென்றடைந்து இருக்கிறது? உங்களின் எவ் ஆக்கங்கள் பெரிது விரும்பப்படுகின்றன ? பார்வையாளர்கள் எப்பகுதிக்கு அடிக்கடி செல்கிறார்கள்? Most Populer விட்ஜெட் எந்தளவிற்கு பயனுள்ளது? எந்த விட்ஜெட் அதிகளவில் பயன்பட்டது? இப்படி பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் தாராளமாக கேட்க முடியும்.

இன்னும் ஒரு பதிவுடன் கூகிள் அனல்ய்டிக் தொடரை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். எவ்வாறாயினும் அவ்வப்போது புதிய விடயங்கள் அறிமுகமாகும் போது அவற்றை உடனுக்குடன் இணைப்பேன். தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்.