பதிவு திருடப்பட்டு பிரதியிடப்பட்ட இடங்களை கண்டு பிடித்தல்
கீழே உள்ள படத்தை பாருங்கள். கூகிள் அனல்ய்டிக் தொடர்பாக அதிகம் முன்னைய பதிவுகளில் சொல்லி விட்டேன். அந்த வகையில் பதிவுகள் எங்கு திருடப்பட்டு பதியபட்டன என்பதை நான் பின்வரும் முறையில் கண்டு பிடித்தேன்.
இவ்வாறே நீங்களும் பதிவு திருடப்பட்டத்தை உறுதிப்படுத்தியவுடன், அடுத்து என்ன செய்ய வேண்டும்?
வலைப்பூவில் இருந்து பதிவை நீக்குவதற்கான முறை
- முதலில் இங்கே செல்ல வேண்டும்
- அடுத்து கீழே உள்ளது போல அந்த படிவத்தை நிரப்பி submit செய்ய வேண்டும்.
- இவ்வாறு அனுப்பி இரு வேலை நாட்களின் உள் கூகிள் அவற்றை நீக்கி உங்களுக்கும் நீக்கியது தொடர்பாக அறிய தருவார்கள்.
- அத்துடன் அவ்வாறு வேறு எதாவது தென்படாலும் reply மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்துவார்கள்.
- இங்கே எனக்கு வந்த மெயில்:
- இப்போது குறித்த ப்ளாக்கில் அந்த பதிவு draft பகுதிக்கு மாற்றப்பட்டு இருக்கும்.
- அத்துடன் திருட்டு வலைப்பூ எதிர்வரும் காலத்தில் கூகிள் தேடல் முடிவுகளில் இருந்தும் நீக்கப்படும். இதற்காகவே பண்டா search algorithm வடிவமைக்கப்பட்டமை நீங்கள் அனைவரும் அறிந்ததே
- . அத்துடன், அந்த வலைப்பூ அட்சென்ஸ் பெற முயற்சிக்கும் போது கூட அது நிராகரிக்கப்படும்.
- இதுவே ஒரு பதிபவரின் பதிவை திருடியதற்கு கூகிள் தரும் தண்டனை.
எவ்வாறாயினும், இப்படி கண்டு பிடித்து நீக்குவது மிகுந்த சிரமத்தையும் நேர விரயத்தையும் கொண்டது. திருடாமல் தடுப்பதே சிறந்த வழி.
பெரும்பாலான பதிவுகள் blogspot அல்லாத தளங்களில் காணப்படுகிறது. அத்துடன் தேடல் முடிவுகளில் முன்னனியும் பெறுகிறது. இவற்றையும் தேடும் தளங்களில் இருந்து நீக்க முடிகிறது. கூகிளின் Panda, Penguin Search Algorithms இதற்கு பலத்த ஆதரவளிக்கிறது என்பது இனிப்பான செய்தி. அடுத்த பதிவில் பிரதி எடுக்கப்பட்ட பதிவுகள் தொடர்பான தகவல்களை தேடும் தளங்களில் இருந்து நீக்குவது பற்றி பார்ப்போம்.