Google Analytic இன் பயன் என்ன?
உங்கள் வலைப்பூவின் மதிப்பு பிரபலம் என்பது உங்கள் alexa rank மூலமோ, உங்களுக்கு கமெண்ட் போடும் கூட்டம் மூலமோ பிளாக்கர் stats மூலமோ மதிப்பிடப்படுவதில்லை. உங்களை நீங்களே மதிப்பிடவும், உங்கள் ஆக்கங்கள் எந்தளவு வாசகர்களை சென்று அடைந்து உள்ளது என்பதை மதிப்பிடவும் Google Analytic (GA)பயன்படுகிறது. இதே போல Adobeஇன் Omniture மற்றும் Woopra போன்றவையும் இதற்கு பயன்படலாம். ஆனால் GAக்கு மட்டுமே இலவசமாக பரந்தளவு ஆதரவு கிடைக்கிறது.
All in One Script யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
- எனது அனல்ய்டிக் தொடரை தொடர்ந்து வாசிக்காதவர்கள்.
- முதன் முதலாக இப்பகுதிக்கு விஜயம் செய்பவர்கள்
- அனல்ய்டிக் மீது ஆர்வம் கொண்ட அனைவரும்.
இதை யார் பயன்படுத்த முடியாது?
இதுவரை எனது தொடரை ஒழுங்காக வாசித்து செயற்படுத்தியவர்கள் மட்டும் இதை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை
பயன்படுத்த முதல் :
- இது வரை வெளி வந்த அனைத்து தொடர்களையும் இங்கே வாசித்து ஓரளவு தெளிவு பெறுங்கள்.
- அனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics - இணைத்தல் 1
- பதிவு திருடர்களை கண்காணித்தல் -Google Analytic - 2
- உங்கள் பதிவுவின் எப்பகுதி வாசகரால் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் - Google Analytics -4
- பதிவின் எப்பகுதி அதிகளவில் எவ்வளவு தூரம் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் - Google Analytic 5
- Google Analytics பயன்படுத்தும் அனைவருக்குமான வழிகாட்டி இலவச கைநூல்
- அத்துடன் புதியவர்கள் மட்டும் முதல் தொடரில் உள்ளபடி https://www.google.com/analytics/web/ சென்று கணக்கை ஆரம்பித்து செயற்படுத்திக்கொள்ளுங்கள். அத்துடன் அவர்கள் தரும் கோடிங்கையும் உங்கள் வலைப்பூவில் இணைத்து விடுங்கள்.
எங்கே இணைக்க வேண்டும்?
நீங்கள் </head> க்கு மேலே இணைக்க வேண்டும். (இதன் போது GA script மேலே இருக்கும்.இதை விட வேறு எங்கும் இணைக்க வேண்டியது இல்லை.எதை இணைக்க வேண்டும்?
அறிக்கையை எங்கே பெற வேண்டும்?
உங்கள் அனல்ய்டிக் கணக்கில் Content >> Event பகுதியில் அனைத்தும் விவரமாக தோன்றும்.
அறிக்கை எப்படி இருக்கும்?
இங்கே சில உதாரணங்களை பாருங்கள்:
==========================================================================
==============================================================================================================================
======================================================================
=================================================
இவை வாசகர் மூலம் பிரதி செய்யப்பட்ட வரிகள்..
இந்த ஸ்கிரிப்ட் நம்ப தகுந்ததா?
நிச்சயம் ஆம். இது பல தடவைகள் பரிசோதிக்கப்பட்டு இங்கே வெளியிடப்படுகின்றன. இங்கு மட்டும் அல்ல வேறு சில தளங்களிலும் இவற்றை நான் வெளியிடுகிறேன். நிச்சயம் இவற்றிக்கு பலத்த தொழிநுட்ப ஆதரவு உள்ளது
நீங்களும் பிளாக்கர் டிசைன் , கோடிங், ஜாவா என ஆர்வம் உள்ளவராயின் இந்த தளத்திற்கு விஜயம் செய்து பாருங்கள். இது கணணிக்கல்லூரியின் முற்பார்க்கை தளமாகும். இங்கே கணணிக்கல்லூரியில் புதிய முறைகள் அறிமுகப்படுத்த முதல் பரீச்சார்த்தமாக பிரசுரிக்கப்படும். அங்குள்ள ஒவ்வொரு elementsசையும் நானே வடிவமைத்தேன். உங்கள் கருத்துக்களையும் வழங்கலாம்.
தரவிறக்க வேகம் பாதிக்கப்படுமா?
இது தொடர்பாக பலர் கேள்வி எழுப்பி இருந்தீர்கள். நிச்சயம் இது எவ்விதத்திலும் தரவிறக்க வேகத்தை பாதிக்காது. இவை அனைத்தும் jQuery இன் அடிப்படையில் இயங்குகின்றன. நீங்கள் இது தொடர்பாக சந்தேகம் கொண்டால் பின்வரும் தளங்களுக்கு சென்று பாருங்கள். அவற்றின் தரவிரக்கத்தில் பாதிப்பை காண்கிறீர்களா? இத்தளங்கள் அனைத்தும் மேலே சொன்னவற்றுடன் மேலும் பல jQuery அம்சங்களை கொண்டவை.
இத்துடன் Google Analytic தொடர் இனிதே முடிவடைகிறது.