பழைய பதிவுகளை தானாக விரிய செய்வது என்றால் என்ன?நீங்கள் சமூக வலைத்தளங்களை பாவிப்பவரா? நீங்கள் ட்விட்டர் அல்லது Facebook அல்லது G+ இவற்றில் ஒன்றை நிச்சயம் பயன்படுத்தி இருப்பீர்கள். இவற்றில் நீங்கள் அடி வரை உருட்டி செல்லும் பொது தானாகவே பழைய போஸ்ட் திறப்பதை கண்டு இருப்பீர்கள். இதே போல தான் உங்கள் வலைப்பூவிலும் முதல் பக்கத்தில் இதை ஒரே கிளிக் மூலம் எவ்வாறு கொண்டு வருவது என்பதை பற்றி இப்பதிவு அலசுகிறது.
பொதுவாக நீங்கள் உங்கள் வலைப்பூவின் முகப்பில் உங்கள் பழைய பதிவுகள் 4 அல்லது 5 தோன்றுமாறு செய்து இருப்பீர்கள். அதை read more மூலம் தொடர்ந்து வாசிக்கும் வண்ணம் வடிவமைத்து இருப்பீர்கள்.
இதன் பொது உங்கள் தளத்தை பார்வையிடும் ஒருவர் முன்னைய பதிவுகளை பெற Older Post என்ற இணைப்பை பயன்படுத்துவார். அல்லது Achieve பகுதி மூலம் செல்வார்.
பழைய முறையால் என்ன நடக்கும்?
- ஒவ்வொரு தடவையும் older post இணைப்பை கிளிக் செய்வதால் பார்வையாளர் சலிப்படைவார்.
- அவரது இணைப்புவேகம் அவரை கொதிப்படைய செய்யும்.
- Archive பகுதி அகலம் சிறியது எனில் வாசிப்பதில் சிக்கல்கள் தோன்றும்.
புதிய முறையால் உள்ள நன்மைகள் ?
- முகப்பு பக்கத்தின் அளவை குறைக்கலாம்.
- வேகமாக தரவிறங்கும்.
- வாசகரின் ஆர்வம் எவ்வளவோ அவ்வளவு தூரம் அவரால் தன்னியக்கமாக செல்ல முடியும்.
இதை இணைக்க முதல் என்ன செய்ய வேண்டும்?
- ஒன்றும் செய்ய தேவை இல்லை
- உங்கள் home page அதிகளவு பதிவுகளை கொண்டு இருந்தால் மட்டும் நீங்கள் Blogger > setting > post > show post > இதில் ஆக கூடியதாக 4 வைத்தால் நல்லம்.
இதன் முற்பார்க்கை எங்கே காணலாம்?
- கணணிக்கல்லூரி முகப்பில் காணலாம்
- tamilinfographics.blogspot.com
இவ்வாறான முறையை நீண்ட காலமாக உருவாக்க எண்ணி இருந்தேன். இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்து. இதை நானே உருவாக்கினேன். jQuery மூலம் இது செயற்படுகிறது. இதை நீண்ட காலம் பரீட்சித்தே வெளியிடுகிறேன். உங்கள் தளத்தில் இயங்காவிடின் உடனடியாக எனக்கு தெரிவியுங்கள்.
தரவிறக்க வேகம் பாதிக்கப்படுமா?
நிச்சயம் இது எவ்விதத்திலும் தரவிறக்க வேகத்தை பாதிக்காது. இவை அனைத்தும் jQuery இன் அடிப்படையில் இயங்குகின்றன. நீங்கள் இது தொடர்பாக சந்தேகம் கொண்டால் மேலே உள்ள தளங்களுக்கு சென்று பாருங்கள். அவற்றின் தரவிரக்கத்தில் பாதிப்பை காண்கிறீர்களா? இத்தளங்கள் அனைத்தும் மேலே சொன்னவற்றுடன் மேலும் பல jQuery அம்சங்களை கொண்டவை.
இதை எப்படி இணைப்பது?
இங்கே கிளிக் செய்து இணைக்கலாம்.
அல்லது
இம்முறையில் பயன்படும் jQuery அடங்கிய Auto Read more ஸ்கிரிப்ட். இதன் கீழே உள்ளதை பாருங்கள்.
இம்முறையை உங்கள் வலைப்பூவில் பயன்படுத்த மேலே உள்ள கோடிங் முழுவதையும் ஒரு விட்ஜெட் ஆக உங்கள் வலைப்பூவில் சேமியுங்கள்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: இறுதியாக (2012.09.09 @ 9pm)இப்பதிவு சில தொழில்நுட்ப சிக்கல்கள் நீக்கப்பட்டு மீள பதியபட்டது . ,முதலில் இணைத்து இயங்காதவர்கள் மீள இணைக்கவும். சிரமங்களுக்கு மன்னிக்கவும்.