Home » » முக்கியமான Smiley (நகைமுகம்) Keyboard குறியீடுகள்

Smiley.svgFacebook பயனடுத்தாத மனித ஜந்துக்களை இப்பூமியில் காண்பது அரிது. அதிலும் Chat வசதி ஒரு அற்புதமான தொழில்நுட்பம். இது தான் நவீன வரலாற்றின் தொட்டில். இதை நான் சொல்லவில்லை. பயன்படுத்தியோர் சொல்லுகிறார்கள். இப்போது விடயத்துக்கு வருவோம்.நகைமுகம் அல்லது புன்னகை தவழும் முகம் அல்லது ஸ்மைலி (☺/☻) எனப்படுவது, மனித முகத்தின் அழகிய புன்னகையை குறிக்கப் பயன்படுகின்ற உணர்ச்சித்திரம் (emoticon) ஆகும். இது பொதுவாக, மஞ்சள் நிறமுடைய (வேறு பல நிறங்களும் பயன்படுத்தப்படுவதுண்டு) வட்டத்தில் (அல்லது கோளத்தில்) கண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கரிய நிற புள்ளிகளும் புன்னகை பூக்கும் வாயை குறிப்பதற்கு வளைந்த வடிவமுடைய கரிய நிற வளைகோடொன்றும் அமைந்த நிலையில் காணப்படும்.


மேலும், ஸ்மைலி என்ற சொல்லே சிலவேளைகளில், அனைத்துவிதமான உணர்ச்சித்திரங்களையும் (emoticon) குறிக்கப் பயன்படுத்தப்படுவதுண்டு.

இவை பெரும்பாலும் skypeஇல் அதிகளவு அவதானிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இவற்றின் அடிப்படை ஒன்று தான். அதாவது ஆரம்ப குறியீடு ஒன்று . :-) என்பது மகிழ்ச்சி தான். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் தமக்கு என ஒரு வடிவத்தை கொடுத்து இருப்பார்கள். skypeஇல் பெரும்பாலும் animated உருவங்கள் தான் உள்ளது. இப்படி பல உள்ளன.

ஆனால் நாம் இதன் உண்மையான வெளிப்பாடு குறித்து அறியவில்லை. அல்லது இவற்றை முழுமையாக பயனடுத்துவது இல்லை. இதனால் தான் இங்கே பயன்படுத்தாவிட்டாலும் பொது அறிவிற்காக பாருங்கள்.