இப்பதிவை எழுதுவதன் நோக்கம்; இத்தளத்திலும் இது இணைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் வாசகர்களில் பலர் இதை பயன்படுத்தும் முறை தெரியாது வெளியேறி விடுகிறார்கள். அவர்களுக்கு உதவும் முகமாகவே இதை பதிவிடுகிறேன். பலர் இது தமக்கு தோன்றவில்லை என்று கூறுகிறீர்கள். உண்மை தான். ஆரம்பத்தில் அவர்கள் உடைய சேவர்கள் தள்ளாடியது. இப்போது அந்த பிரச்சனை இல்லை. Disqus Script சற்று தாமதமாகவே திறப்பதாகவே அமைக்கப்பட்டு உள்ளது. எனவே பக்கம் பூரணமாக தரவிறங்கிய பின்னரே கமெண்ட் பாக்ஸ் தோன்றும். இது இயங்க நிச்சயம் ஜாவாஸ்க்ரிப்ட் இயக்கம் உங்கள் உலாவியில் இருக்க வேண்டும்.
இதை பயன்படுத்தும் முறை:
கீழே இதன் போது தோற்றத்தை பாருங்கள்.இங்கே எப்படி கருத்துரைகளை இடுவது?
- முதலில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
- அடுத்து எதோ ஒரு முறையில் உங்களை உறுதிப்படுத்துங்கள்.
- நீங்கள் இதற்க்கு ட்விட்டர் உட்பட 4 சேவைகளை பயன்படுத்தலாம்.
- இல்லாவிட்டலும் உங்கள் மின்னஞ்சல் முகவரி ஊடாக பதிந்து கொள்ளுங்கள்.
- நிச்சயம் அதில் உள்ள பெட்டியில் சரி அடையாளம் இடுக. இல்லாவிடின், உங்களுக்கு என்னுடைய பதில்கள் கிடைக்காது.
- நீங்கள் அதில் சரி அடையாளம் இட்டால் குறித்த பதிவின் கமெண்ட் மட்டுமே மின்னஞ்சல் செய்யப்படும். வேறு பதிவு சார்ந்த்ததோ அல்லது அவர்களுடைய விளம்பரங்களோ அல்லது newletterகளோ அனுப்பபடுவதில்லை.
- நீங்கள் உங்கள் புகைப்படத்தை கூட உங்கள் அவதார் ஆக பயன்படுத்த முடியும் (படம் பார்க்க) .பின்னர் நீங்கள் வேறு தளங்களில் உள்ள Disqus comment Boxஇல் கூட உங்கள் மின்னஞ்சலை இட்டால் தானாவே உங்கள் புகைப்படம் தோன்றும். (சரி அடையாளம் இட்டால் மட்டும்)
மறுமொழிகளை பெறுதல், ஸ்டார் வழங்குதல் மற்றும் பகிர்தல்
நீங்கள் பதிவிற்கு ஸ்டார் வழங்கும் முறையை பாருங்கள். இதற்கு நீங்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. அதிக வாசகர்கள் ஸ்டார் வழங்கும் போது பதிவு சிறப்பானது என்ற முடிவிற்கு வரலாம். ஒருவர் ஒரு நட்சத்திரம் மட்டுமே ஒரு பதிவிற்கு வழங்க முடியும்.
நீங்கள் முன்னைய முறையில் சரி இடவில்லை எனில் இங்கே நீங்கள் RSS அல்லது மின்னஞ்சல் ஊடக உடனடியான மறுமொழிகளை பெறலாம். இதை விட இந்த பதிவுகளை சமூக தளங்களிலும் பகிரலாம்.
இறுதியாக நீங்களும் இந்த பதிவு விளங்கி உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்க கீழே உள்ள Disqus பெட்டியில் முயற்சி செய்யுங்கள்.
- குறிப்பு: கமெண்ட் பாக்ஸ் இயங்காவிடின் இங்கே அறிய தாருங்கள்.
- பக்க தரவிறக்க வேகம் தற்போது மீள ஒழுங்கமைக்கப்பட்டு விட்டது. உங்களால் 5 secக்குள் பூரண பக்கத்தை காண முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.