உலகில் 500க்கும் அதிகமான தேடும் பொறிகள் உள்ளன. இவற்றை இங்கே காணுங்கள். SEOவின் இறுதி நோக்கம் தேடு யந்திரங்களில் உங்கள் தளங்கள் முன்னணி பெருதலாகும். பெரும்பாலும் ஆங்கில தளங்களில் தான் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே தான் அவற்றிக்கு SEO அவசியமாகிறது. தமிழை பொருத்தவரை SEO தற்காலத்திலே அதிக முக்கியம் பெற ஆரம்பிக்கிறது. தமிழில் குறித்த தேடும் சொல்லிற்கான முடிவுகளின் எண்ணிக்கை அண்மைகாலங்களில் அதிகளவில் உள்ளது.
SEO ஏன் அவசியமாகிறது?
- உங்கள் தளங்களின் பார்வையாளர்களின் வருகையை அதிகரித்தல் (organic traffic)
- விளம்பர தளங்களில் முன்னணி பெறுதல்
- உங்கள் தனிப்பட்ட ஆளுமைக்கு படிக்கட்டாக அமைதல்
- இன்னும் பல....
SEOவில் அவசியமானவை என்ன?
- Site map
- indexing
- meta tag
- பக்க வடிவமைப்பு மொழிகள்
- பக்க தரவிறக்க வேகம்
- பக்க அளவு
- கவர்ச்சிகள்
- உள்ளடக்கத்தின் தரம்
- தகவல் பாதுகாப்பு
- வாசகருக்கு இயைபாக்கம் அடையும் தன்மை.
இப்படி பல இருக்கிறது. ஒவ்வொன்று ஒவ்வொரு சேவை வழங்குனர்களை பொறுத்து மாறுபடுகிறது. இவற்றை மேம்படுத்துவதன் மூலமே முன்னணி பெற முடியும். இவற்றை பற்றி ஒவ்வொன்றாக நாம் ஒவ்வொரு பதவில் பார்ப்போம். இவற்றில் சில பற்றி ஏற்கனவே பல தமிழ் பதிவுகள் வந்துவிட்டன. எனவே அவசியமான இடங்களில் மட்டும் இவ்வாறு முன்னரே வந்த விடயங்களை ஆராய்வேன்.
அடுத்த பதிவில் page indexing, Sitemap தொடர்பாக பார்ப்போம்.
SEO பற்றிய இத்தொடர்கள் தொடர்ந்து கண்காணிக்கபடுகின்றன. எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத பட்சத்தில் விரைவில் இத்தொடர் இடை நிறுத்தப்படலாம்.
SEO பற்றிய இத்தொடர்கள் தொடர்ந்து கண்காணிக்கபடுகின்றன. எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத பட்சத்தில் விரைவில் இத்தொடர் இடை நிறுத்தப்படலாம்.