இணைய பக்கங்களில் குறித்த டொமைனின் கீழ் நீங்கள் சென்ற பக்கம் இல்லை என்றால் தோன்ற செய்யப்படும் பக்கங்கள் Error page என அழைக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. பிளாக்கர்களில் கூட இதை வைப்பது பற்றி பல பதிவுகள் இணைய வெளியில் தமிழில் உலாவுகின்றன. அதனால் அது பற்றி எதுவும் இங்கே தேவை இல்லை. இணைய வடிவமைப்பாளர்களின் சிம்ம சொர்ப்பனமாக விளங்கும் HTML5 மூலம் பல இணைய தளங்கள் தமக்கு என்று பல விதமான கண்கவர் 404- Error pageகளை வடிவமைத்து உள்ளன. நான் இதில் மிகவும் கவர்ச்சி மிக்கதும் இயங்ககூடியதுமானசில error pageகளை அவற்றின் இயங்கு நிலை உடனே இங்கே இணைத்து உள்ளேன். ஒவ்வொன்றிலும் உங்கள் மௌஷை கொண்டு செல்லும் போது எதோ மாற்றம் வரும். ஒவ்வொன்றின் கீழும் முடிந்தளவு சிறிய விளக்கத்தை கொடுத்து இருக்கிறேன். உங்களுக்கும் இது பற்றி வேறு தளங்கள் தெரிந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவற்றில் எதுவும் அதிசயங்கள் இல்லை. சும்மா, ஒரு கவர்ச்சிக்கு தான் இந்த மூன்றும். அடுத்து வருபவை தான் அட்டகாசமானவை.
1) foradian.com
இதில் சிறப்பே இதன் நடுவில் உள்ள பல்கோணி தான். அதை உங்க மௌஸ் மூலம் உருட்டுங்கள். ஏகப்பட்ட வடிவம் தெரியும். கீழே உருட்டி பாருங்கள்.
2)www.apartmenthomeliving.com/404.html
இதில் பெரிதாக இல்லை. அந்த கம்மேர்ட் மீது அம்புக்குறியை கொண்டு செல்லுங்கள். அப்புறம் தெரியும்.
அடுத்து வருவதில் எல்லாம் உங்கள் மௌஸ் அம்புக்குறியை இடம் - வலம், மேலும் கீழும் அசைத்து பாருங்கள்.
4)https://github.com/404 (கிளிக் செய்து செல்லுங்கள்)
5)www.bluedaniel.com/404
6)proteys.info/404/
7)hbit.ly/404040404
8)hakim.se/experiments/html5/404/netmag.html
இந்த இரண்டும் சற்று வித்தியாசம்!