எல் காஸ்ட்டிலோ பிரமிட் ( El Castillo) என்பது மெக்சிக்கோவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோஅமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச் சொல்லாகும்.
9 ஆம் நூற்றாண்டளவில், மாயன் நாகரீக மக்களால் கட்டப்பட்ட இது குகுல்கன் (குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது.
பிரமிடின் அமைப்பு
இது சதுரவடிவத் தளங்களைக் கொண்ட ஒரு படிக்கட்டுப் பிரமிட் ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும், மேலேறிச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. உச்சியில் கோயில் அமைந்துள்ளது. காலத்துக்குக் காலம், பழைய பிரமிட்டுகளைப் பெருப்பித்து அவற்றைப் பெரிய பிரமிட்டுகளாக உருவாக்குவது மெசோஅமெரிக்க நகரங்களில் வழக்கமாக இருந்தது. இதுவும் அத்தகைய ஒரு பிரமிட்டுக்கான எடுத்துக்காட்டு ஆகும். இப்போதைய பிரமிட்டின் அடிப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள கதவொன்றின் வழியாக உள்ளே சென்று பழைய பிரமிட்டில் அமைந்துள்ள படிமீது ஏற முடியும். உள்ளே அமைந்துள்ள பழைய பிரமிட்டின் உச்சியிலுள்ள அறையொன்றில் குகுல்சான் மன்னனின் அரியணை அமைந்துள்ளது. இதன் வடிவம் சந்திர கால அட்டவணையான புதிய பிரமிட்டை உள்ளடக்கிய சூரிய கால அட்டவணையாக பழைய பிரமிட் உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சிறப்பு மிக்க இந்த எல் காஸ்ட்டிலோ பிரமிட் டை கூகிள் ஸ்ட்ரீட் view மூலம் கண்டு களிக்கலாம். சில நாட்களுக்கு முன்னரே இவை வெளியிடப்பட்டன. நீங்களும் இதை இங்கே பார்த்து மகிழுங்கள்.