Home » , » பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு (jQuery Methord)

கணணிக்கல்லூரியில் இதுவரை பதிவு திருடர்களை கண்காணிக்கும் முறை, எதை திருடினார்கள் எனபதை கண்டுபிடிக்கும் நுட்பம், பதிவு திருடர்களை தடுத்தல் என்ற வரிசையில் இறுதியாக பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு என்ற தலைப்பில் ஒரு நிரந்தர தீர்வை வழங்குகிறேன்.இதை எழுதி நீண்ட காலம் ஆகி விட்டது. ஆனால் இதை பயன்படுத்தி இதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து உங்கள் முன் கொண்டுவரவே நீண்ட காலம் ஆகிவிட்டது. இப்போது இதில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். எதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.


இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
  • இது வரை எந்த பிரதி எடுத்தலை தடுக்கும் முறைகளை பயன்படுத்ததவர்களும்,
  •  பயன்படுத்தியும் பிரதி செய்யப்படுபவர்களை தடுக்க முடியாதவர்களும், 
  • கணணிக்கல்லூரியில் வந்த முன்னைய முறைகளை பயன்படுத்தாதவர்களும் இதை பயன்படுத்தலாம்.
  • முன்னைய முறைகளை பயன்படுத்துபவர்கள் கூட அதை நீக்காமல் பயன்படுத்தலாம்.


இம்முறையின் சிறப்பு என்ன?

  • நீங்கள் இதுவரை பயன்படுத்தும் முறைகளில் உள்ள ஜாவாஸ்க்ரிப்ட் மிக பெரியது.
  • ஆனால் இந்து திருக்குறள் போல இரு வரி மட்டும் தான். மிக சிறியது
  • சாதரணமான ஸ்கிரிப்ட் HTML உடன் இணைந்த ஜாவா மூலம் ஆளப்படுகிறது. ஆனால் இது jQuery மூலம் மட்டும் இயங்குகிறது.
இதை எங்கே பயன்படுத்துவது?

உங்கள் வலைப்பூ அல்லது இணைய பக்கத்தில் <head> ஒட்டை தொடர்ந்து உடனடியாக கீழே உள்ள இரு வரி கோடிங்கை  பிரதி செய்யுங்கள்.


<script src='https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js'/>
<script src='http://tamilccjs.googlecode.com/files/copyprotectv1.js'/>


ஆனால் பொதுவாக ஜாவாஸ்க்ரிப்ட் இயக்கத்தை நிறுத்தியவர்களையும் இதன் மூலம் நிறுத்த வேண்டுமாயின் எமது முன்னைய பதிவின் படி noscript கோடிங்கையும் இணைத்தே பயன்படுத்த வேண்டும். ஆகவே நீங்கள் உங்கள் வலைப்பூவின் <head> tagஇன் கீழே பின்வரும் பகுதியை பிரதி செய்து save செய்த பின்னர் பயன்படுத்துங்கள்.



உங்களால் முடிந்தால் இங்கே (Demo)  சென்று அங்குள்ள குட்டிக்கதையை பிரதி எடுத்து இங்குள்ள கமெண்ட் பாக்ஸ்சில் அப்படியே பிரதி செய்து காட்டுங்கள்  பார்ப்போம்?!!

This JavaScript has full copyright to Tamil Computer College under open MIT License. Don't Distribute this code without any permission. Users only allow to use this code.