இந்த பதிவில் வாசகர்களாகிய உங்களுடன் சில தகவல்களை , அறிவிப்புகளை பகிர வேண்டி உள்ளது.
1) இன்றுடன் 100 Friend Connect இணைப்பை பயன்படுத்துபவர்கள் இணைந்து உள்ளார்கள். நீண்ட காலமாக 98 இருந்த போதும் இன்று தான் 100ஐ தொட முடிந்ததது. இதற்கு வழிசமைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இதை விட feed Burner மூலமும் (91) ட்விட்டர் (176) மூலமும் G+ மூலமும் இணைந்த வாசகர்களுக்கு நன்றிகள்.
2) இதுவரை காலமும் கணணிக்கல்லூரிக்கு என்று எந்த ஒரு Faacebook பக்கமும் இருக்கவில்லை. ஆனால் தளத்திற்கு வரும் வாசகர்களை பின்தொடர்ந்ததிலும் கருத்துக்கணிப்புகளில் இருந்து தனியே Facebook மட்டும் பாவிக்கும் வாசகர்கள் மொத்த்தின் 40%க்கும் அதிகம் என்பதாலே கனனைக்கல்லூரிக்கு என்று தனியாக ஒரு facebook பக்கம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
3) மேலுள்ள ஏதேனும் ஒரு வழி ஊடாக கணனிக்கல்லூரியை தொடர்ந்து எந்நேரமும் இணைத்து இருக்க முடியும்.
4) இத்தளம் தரவிறங்குவதில் அதிக நேரம் எடுக்கிறது என்பது பெரும்பாலானவர்களின் குற்றசாட்டு. சராசரியை விட 15% தாமதம் என்பதை ஒத்துக்கொள்கிறோம். இது தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. மிக விரைவில் 5 Sec என்ற கால அளவை இலக்காகவும் 500KB என்ற பக்க அளவையும் இலக்காக கொண்டு பக்கம் மீள் வடிவமைப்பு செய்யப்படும் என்று உறுதி அளிக்கிறோம்.
(பொதுவாக தமிழ் தளங்கள் 1MBக்கும் அதிகமான பக்க அளவை கொண்டு உள்ளன. அத்துடன் அதிக நேரத்தையும் எடுக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடும் போது நாம் பரவாய் இல்லை.)
5) இங்கு வரும் வாசகர்களின் நடத்தையை கண்காணிப்பது பொருத்தமானது என்ற உங்கள் கருத்துகணிப்பு முடிவின் படி தொடர்ந்து இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும். எனினும் சில மாற்றங்கள் விரைவில் செய்யப்படும்.
6) இத்தளத்தில் புதிய பல ஸ்கிரிப்ட் முறைகளை பீட்டா நிலையில் இணைப்பது பக்க வேகத்தை கடுமையாக பாதிக்கிறது. இதையும் வேறு சில தேவைகளையும் அடிப்படையாக கொண்டு www.computercollege.freevar.com என்ற முகவரியில் கணணிக்கல்லூரியின் Preview site அறிமுகப்படுத்த்தப்பட்டு உள்ளது.
7) இத்தளத்தில் பிரசுரமாகும் பெரும்பாலான தகவல்கள் உயர்மட்ட தொழிநுட்ப அறிவுள்ளவர்களுக்கு மட்டும் பொருத்தமானதாக அமைவதாக ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான். Free Download, Cracking அழகிய விட்ஜெட், பிளாக்கர் டெம்ப்ளேட் டவுன்லோட் , இப்படி யாருமே வாசிக்கத்தை போடுவதால் என்ன பயன்?
அதனால் தான் இப்படி உயர் மட்ட தகவல்களை போடா வேண்டி ஏற்பட்டது. எதிர்காலத்தில் நிச்சயம் சாதாரண வாசகர்களை மையமாக கொண்டே பதிவிடப்படும். எவ்வாறாயினும் உயர் மட்ட தகவல்கள் அத்துறை சார்ந்தவர்களுக்காக அவ்வப்போது வெளியாகும்.
இறுதியாக,
நீங்களும் இது வரை இந்த கருத்துக்கணிப்பு மற்றும் Survey இல் பங்கு பெறவில்லையாயின் உங்கள் கருத்துக்களை எமக்கு வழங்கலாம். இது நிச்சயம் எமக்கு பயனுள்ளதாக அமையும்.
இரகசியமானது அந்தரங்கமானது..
தயவுசெய்து உண்மையான தகவல்களை மாத்திரம் வழங்குங்கள்...