Home » , » Adsense பாதிக்கப்படுவதை தடுக்க பார்வையாளர்களிடம் உள்ள Adblocker இயக்கத்தை எப்படி நிறுத்துவது?

வணக்கம் நண்பர்களே, நீங்க காலத்தின் பின்னர் உங்களை சந்திக்கிறேன். ஆர்வக்கோளாரில் ஒரு வலைப்பூவை தொடக்கி, எனக்கு என்று ஒரு என்னை பின் தொடரும் கூட்டமாக உருவாகிய உங்கள் அனைவருக்கும் என்னால் கடந்த ஒரு மாதங்களாக ஒரு பதிவை கூட இட முடியவில்லையே என்பது என் நீண்ட கவலை. இந்த பதிவும் அனைவருக்கும் பயன்படும் என்று எதிர்பார்க்க வில்லை நான்.
இப்பதிவு Adblockers மூலம் Adsense வருமானம் பாதிக்கப்படுவதை உங்கள் வலைப்பூவில் தடை செய்வது எப்படி? என்ற பதிவின் தொடர்ச்சியே ஆகும். அதை வாசிக்கதவர்கள் முதலில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 பெரும்பாலும் உங்கள் வலைப்பூவில் அல்லது இணைய தளத்தில் Adsense அல்லது அது சார்ந்த விளம்பரங்களை adblocker என்ற extension மூலம் தங்கள் வலைப்பூவில் தோன்றுவதை தடுக்கும் பார்வையாளர்களை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியே  இப்பதிவு அலசுகிறது.

இந்த coding இன் சிறப்பு: ஒவ்வொரு CSS, Script  என அனைத்தையும் நானே வடிவமைத்தேன். இது வரை ஆங்கிலத்தில் கூட பூரணமாக வெளி வராத இம்முறை தமிழில் கிடைப்பது தமிழின் சிறப்பே! இங்கு தோன்றும் தகவல்கள் கூட தமிழ் மொழியில் காட்சி படுத்துமாறு வடிவமைத்து உள்ளேன்.

நீங்களும் ஒரு Adblock பாவனையாளர் எனில் நீங்கள் இது எவ்வாறு இயங்கும் என்பதை பரிசோதித்து பார்க்க இங்கே விஜயம் செய்யுங்கள்.



இனி பதிவை நீட்டி செல்ல விரும்பவில்லை! உங்கள் வலைப்பூவில் இந்த கோடிங்கை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்

1.முதலில் உங்கள் Blog template பகுதியை திறந்து கொள்ளுங்கள்.
2.</head> இப்பகுதியை கண்டு பிடியுங்கள்.
3.அதன் மேலே கீழே உள்ள கோடிங் பகுதியை பிரதி செய்யுங்கள்.




4. அடுத்து </body> இந்த வரியை கண்டு பிடியுங்கள்.
5. அதன் மேலே கீழே உள்ள கோடிங் பகுதியை பிரதி செய்து சேமியுங்கள்.



6.இப்போது adblocker உள்ள உலாவியின் மூலம் உங்கள் வலை பூவை திறந்து மாயத்தை பாருங்கள்.

எவ்வாறாயினும் இது விளம்பரங்களை காட்சி படுத்தும் தளங்களுக்கே பயனுள்ளது. எனினும் எதிர் பாரா விதமாக adblocker மூலம் உங்கள் பக்கங்களின் சில பகுதிகள் தரவிறங்குவது சிக்கலை எதிர் நோக்கினாலும் இது பயனுள்ளது!

மற்றுமொரு பதிவில் உங்கள் தளத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களில் Adbolcker பயன்படுத்துபவர்களை எவ்வாறு Google Analytic மூலம் கண்காணித்தல் தொடர்பாக   உங்களை சந்திக்கிறேன். இப்பகுதியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அல்லது சிக்கல்களை சந்தித்தால் என்னுடன் (கமெண்ட் பகுதி ஊடாக) தொடர்புகொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த கோடிக் தற்போது பீட்டா நிலையில் உள்ளது. நான் தொடர்ந்து வடிவமைத்து கொண்டு இருக்கிறேன். எனினும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். இதன் முதலாவது பதிப்பு வெளியிடப்படும் போதும் உங்களுக்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த கோடிங் காப்புரிமை பெற்ற ஒன்று. யாராவது இதை  அனுமதி இல்லாமல் பிரசுரிக்க / மீள் ஒழுங்கு படுத்த நினைப்பது என்னுடயை ஆக்கத்தை திருடுவதாக அமையும்.

பீட்டா நிலையில் உள்ள சில பகுதிகலை நீங்கள் வெறுக்கலாம். இது விரைவில் நீக்கப்படும்!  (Eg: Redirect to us, allow viewers to skip waring msg)