
காணொளி, ( video) என்பது ஒளி மற்றும் ஒலிக் கோப்புகளை ஒருங்கே இணைத்து காட்டும் தொழில்நுட்பம் ஆகும். நிகழ்படக் கோப்புகள் பைட்டுகளிலேயே அளவிடப்படுகிறது. நிகழ்படக் கோப்பு வடிவங்கள் 3GP, MP4, WMV, AVI, FLV போன்ற பெயர்களில் வகைப்படுத்தப்படுகிறன. திரைப்படங்களும் தொலைக்காட்சியும் நிகழ்படக் காட்சிகளையே ஒளிபரப்புகின்றன. நிகழ்படத்தை பல படிவங்களின் தொகுப்பு எனவும் கூறலாம். நீங்கள் பலவிதமான வீடியோக்களை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் இவை பற்றிய அடிப்படை அறிவு அனைவரிடமும் இருக்கிறதா என்றால் இல்லை என்றாய் கூற வேண்டும் .
இவற்றை பற்றி நிறையவே கதைக்கலாம். ஆனால் காணொளி பற்றி அடிப்படை விளக்கங்களை கணனி பாவனையாளர்களுக்கு வழங்க இந்த கையேடு உதவுகிறது. அறியாத அனைவரும் அறிந்து கொள்ள இது உதவும் என எதிர் பார்க்கிறேன்.