Home » , » மிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் - Watch Youtube streaming in Slow Internet Speed

அனைவருக்கும் Youtube இல் காணொளிகளை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் பல சமயங்களில் அது நிறைவேறுவதில்லை.பொதுவாக YouTube homeஇரவில் தான் நேரம் கிடைக்கும் ஆனால் இந்நேரம் இணைய இணைப்பு வேகத்தில் சுருங்கி விடும்.அடுத்தது  coverage பிரச்சனை. Network   Receiver, Busy என்றால் tower தானாகவே coverage தூரத்தை  குறைந்து கொள்ளும். இப்படி பல பிரச்சனைகள். ஆனாலும் youtubeஇல் பல தரமான காணொளிகள் , திரைப்படங்கள் என பல உண்டு. இவற்றை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்.



இதில் எந்த புதுமையும் இல்லை. வழக்கமாக நாம் கையடக்க தொலைபேசிகளில் பார்க்கும் முறையை கணணியில் பிரயோக்கிக்க போகிறோம். அவ்வளவுதான். இது மிக இலகுவான முறை.

இதன் நம்மைகள் என்ன?

  1. மிக மிக மெதுவான இணைப்பிலும் தொடர் அறா நிலையில் காண முடியும் . 10 KBps என்ற அளவு போதும்.
  2. data பாவனையும் குறைவு.

இதன் குறைகள் என்ன?

  • காணொளி தரம் குறைவானது 
  • 3D, HD இவற்றை எதிர் பார்க்க முடியாது.
  • Mono sound 
  • இதற்கு விசேடமாக ஒரு மென்பொருளை தரவிறக்க வேண்டி உள்ளது.

என்ன குறைகள் இருந்தாலும் streaming  இடையூறு இன்றி கிடைப்பதால் இதை விரும்பலாம்.


இதற்கு என்ன செய்ய வேண்டும்?


  1. RealPlayer  என்ற மென்பொருளை இங்கே தரவிறக்கி நிறுவுங்கள் . ஏற்கனவே இருந்தால் தேவை இல்லை.
  2. அடுத்து  m.youtube.com இந்த இணைப்புக்கு விஜயம் செய்யுங்கள்.
  3. விரும்பிய காணொளியை தெரிவு செய்து Watch  Now என்பதை தெரிவு செய்யுங்கள்.
  4. தானாகவே RealPlayer இயங்கி தொடர்ந்து இடையூறு இல்லாமல் காட்சிகள் நகர ஆரம்பிக்கும்.

பொதுவாக mobile இல் காணொளி பார்ப்பது பற்றி அறிந்து இருப்பீர்கள். ஆனால்  இதுவே கணணியில் இயங்குவதில்லை. காரணம். rstp என்ற protocal மூலமே இது தொலைபேசியில் சாத்தியமாகிறது. பொதுவாக இந்த  protocal லை VLC media player நன்றாக கையாளும். ஆனாலும் இது youtube உடன் இயங்க சிரமப்படுகிறது. அதனால் தான் real player  தேவைப்படுகிறது.

இனி நீங்களும் கணணியில் youtube திரைப்படங்களை காணுங்கள். இது தொடர்பான சில இடைமுகங்கள் இதோ::





** Windows 8 வந்து விட்டது. நன்றாக இருக்கிறது. நீங்களும் மாற வேண்டிய தருணம் விரைவில் வரும்.. நிறுவுவது தொடர்பான விளக்கங்களை இங்கே விரைவில் காணலாம்.