
பொதுவாக அனைத்து இடங்களும் புதுப்பிக்கபடுவது இல்லை. உதாரணமாக அண்மையில் முள்ளிவாய்க்கால் பகுதி புதுப்பிக்கப்பட்டது.ஆனால் அதை அண்டிய கிளிநொச்சி பகுதி புதுப்பிக்கப்படவில்லை. கூகிள் மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கோள்கள் முன்னுரிமை அடிப்படையில் வரைபடங்களை எடுக்கிறது.
நீங்களும் உங்கள் இடங்களின் satellite images புதுப்பிக்கப்டும் போது மின்னச்சலில் தகவலை பெற https://followyourworld.appspot.com என்ற தளத்தில் சென்று பதிவு செய்யுங்கள்.
இதை கையாள்வது மிக இலகுவானது. ஆனாலும் சில விளக்கம்.
- முதலில் நீங்கள் எந்த இடத்தை தெரிவு செய்கிறீர்களோ அவ்விட பெயரை type செய்து தேடுங்கள்.
- அடுத்து உங்கள் வீட்டை குத்துமதிப்பாக + அடையாளம் மூலம் தெரிவு செய்யுங்கள். அதன் பின்பு தானாகவே உங்கள் பூகோள நிலையமைப்பு கணிக்கப்படும்.
- இப்போது உங்கள் Google account மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலை தானாக அறிவிப்புக்கள் அனுப்பப்படும்.
அவ் இணைய தள இடைமுகம் இது தான்.!!