Home » » தொழில்நுட்ப துளிகள் - செய்திகள் - மாற்றங்கள் - 2

சில முக்கிய Technology மாற்றங்கள் மற்றும் சில தொழில் நுட்ப அறிமுகங்கள் தொடர்பாக 2 வது தடவையாக உங்களை சந்திக்கிறேன். வழமை போல புதிய விடயங்கள் பலவற்றை தொகுத்து தர முயற்சித்து உள்ளேன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.இப்பதிவை  ஒரு நாள் பிந்தி வெளியிட வேண்டியதாகி  விட்டது. அடுத்த வாரம் சரியாக வெளியிட முயற்சிக்கிறேன்.


புது வரவு : WII U Video Game Console


Wii என்பது home video game console. அதாவது xbox, play station  போல ஒன்று. WII 2006 இல் வெளியிடப்பட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து WII U  2012.11.18 அன்று USA இல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல இடங்களில் இது விற்பனைக்கு வரும். பெரிதாக இது தொடர்பாக உங்களுக்கு  ஆர்வம் இருக்காது.  ஒரு Gentral knowledge க்கு சொன்னேன் . மேலும் அறிய விரும்பியவர்கள் wikipedia.org இல் காணுங்கள்.


Windows 8 இல் சில பிழைகள் 


Windows 8  என்னதான் கடும் உழைப்பில் வெளியாகி இருந்தாலும் சில பிழைகள் ஏற்பட்டு உள்ளன. அந்த வகையில் உலகளாவியில்  பயனாளர்களில் பலருக்கு திடீர் என்று reboot ஆவது பதிவாகி உள்ளது. இது தொடர்பாக Microsoft அறிவிக்காத  போதும் Twitter இல் இது தொடர்பாக அதிகம் பகிரபட்டு வருகின்றன. எவ்வாறாயினும் Windows Phoneஇல்  இவ்வாறான பிரச்சனையை இனம் கண்டு இருப்பதை Microsoft ஒத்துக்கொண்டுள்ளது. இப்பொழுதும் XP பாவிப்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை தானே.

CO.CC  Domain செயல் இழந்தது


முன்பு ஒரு காலத்தில் co.cc  இலவசமாக கிடைப்பதாலும் Adsense க்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதாக வதந்தி உலாவியதாலும் இதை பலர் பயன் படுத்தினர். அது மட்டுமல்லாது cloudfare போன்ற சேவைகளை அணுகவும் இது இலவசமாக கிடைப்பது உதவியது.ஆனால்  இது கடந்த வாரம் முதல் சேவையில் இருந்து நீங்கி விட்டது. எவ்வித உத்தியோக பூர்வ அறிவிப்புகளும் வெளியாக நிலையில் பலர் வேறு domain களுக்கு மாற ஆரம்பித்து விட்டார்கள். farewell to co.cc என்ற சொற்பதம் கூட பிரபலம் ஆகி விட்டது. என்றாலும் இதனால் இதை பயன்படுத்தியவர்களுக்கு search indexing இல் ஏற்பட்ட போகும் பாதிப்பு பெரியது தான்.

Grand Theft Auto   5 தயாராகிறது  - Trailer 2  வெளியாகியது 


Rockstar games வெளியிட்டு பிரபலமாகிய விளையாட்டு தான் Grand Theft Auto. பொதுவாக Vice City என்று  இலகுவாக அறிய பட்டது..  இதன் 5 பாகம் 2013 இல் வர உள்ளது. இதை முன்னிட்டு இதன் முன்னோட்டங்கள் வெளியிடப்பட்டது. 3D  இல் DTS உடன் கலக்கலாக வெளியாகி இருப்பது இதன் மூலம் உறுதி ஆகிறது. இது தொடர்பாக  #GTAV  என்ற hash tag மூலம் புதிய அறிமுகங்களை பெறுங்கள். SPRING 2013 இல் வெளியிடப்படும் என்றார் அறிவித்து முற்பதிவுகளை  ஆரம்பித்து உள்ளார்கள். இந்த விளையாட்டின் பிரபல தன்மையை சொல்ல வேண்டுமாயின் என் வாழ்க்கை vice city போல இருக்க வேண்டும் என்று உதாரணமாக சொல்பவர்களை அதிகம் (?) கண்டிருக்கிறேன்.

Microsoft Windows 8 மற்றும் Office ProPlus 2013 க்கான Cracks  வெளியாகியது


இவை இரண்டுமே அதிகம் எதிர் பார்க்கபட்டவை. இரண்டாவது இன்னும் முழுமையாக வெளியாக வில்லை. என்றாலும் இவற்றுக்கான திருட்டு பதிப்புக்கள் முழுமையாக சில தினங்களுக்கு முன் வெளியாகியது. பெரும்பாலும் கொரிய தொழிநுட்ப வியலார்கள் இதை வெளியிட்டு இருக்கலாம். ஏன் எனில் அவர்கள் மொழிக்கு முன்னுரிமை அளிக்க பட்டு இருக்கிறது. அரசியல் பிரச்சனைகள் , மற்றும் இராணுவ பிரச்சனைகளில் பல இலாபம் பலருக்கு கிடைக்கிறது. 


இன்னும் சில செய்திகள்:


  • Windows 7 க்கு Service packs  வெளியிடுவதை Microsoft நிறுத்தி விட்டது. SP1  தான் இறுதி.
  • அடுத்த வருடம் Windows live messenger  வெளியிடுவது நிறுத்தபட்டு Skype உடன் இணைக்கபட்ட உள்ளது. 
  • Google இந்திய  பொருளாதாரத்தை இலக்கு வைத்து பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக மொழிகளுக்கான ஆதரவை அதிகரிக்கிறது, இந்தவகையில் தமிழுக்கு adsense கிடைத்தாலும் ஆச்சரியம் இல்லை.  (நன்றி : தினமலர்)