Home » » உங்கள் விமர்சன பதிவுகளுக்கு கூகிள் தேடலில் நட்சத்திரங்களை நீங்களே இணைப்பது எப்படி? Add (Star) Rating to Your Reviews on Google Search Result

இன்று வலை பதிவுகளை எழுதும் தமிழ் பதிபவர்கள் அதிகரித்து உள்ளனர். பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுபவர்கள், கவிதை எழுதுபவர்களை அதிகம் காணலாம். பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் இந்த விமர்சனம் எழுதுபர்கள் கூகிள் தரும் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். மென்பொருள் என்றாலும் சரி,புத்தகம் என்றாலும் சரி தமது விமர்சனத்துக்குரிய Rating புள்ளியை Google Search result  பகுதியில் தெரிய வைக்கிறார்கள். இவ்வாறே நீங்கள்  இனி எழுதும் விமர்சனங்களுக்கு எவ்வாறு இந்த வசதியை சேர்ப்பது என்று பார்ப்போம்.

இன்று வரை எந்த தமிழ் விமர்சகரும் இந்த வசதியை இணைத்ததாக தெரியவில்லை. அதனால் தான் இதை பதியலாம் என்று எண்ணினேன்.

அடிப்படை தேவைகள் என்ன?

1.  G+  profile இருக்க வேண்டும். (இல்லாவிடின் வேறு முறைகள் உண்டு)
2. Google search பகுதியில் தேடல் முடிவுகளில் உங்கள் பகுதியும் வரும் வகையில் உங்கள் தளம் Google இல் index செய்யபட்டு இருக்க வேண்டும். (Google Webmaster service) (அவசியம் அல்ல- ஆனால் முக்கியம்)

இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

• சினிமா விமர்சனம் எழுதுபவர்கள்
• மென்பொருட்கள் பற்றி எழுதுபவர்கள்
• புத்தகங்ககளை விமர்சிப்பவர்கள்
• மொத்தத்தில் விமர்சகர்கள்

விமர்சன பதிவுகளுக்கு மட்டுமே இதை பாவியுங்கள். இப்போது தமிழ் தளங்களும் முன்னுரிமை அடிப்படியில் index செய்யப்படுகிறது. தேவை இல்லாமல் rating கொடுப்பது எதிர்மறை விளைவுகளை கொடுக்கலாம். Googleஇன்  terms இனை வாசியுங்கள்

இதற்கு முதல் நீங்கள் நிச்சயம் உங்கள் தளத்தையும், உங்கள் Google Plus Profile  ஐயும் இணைக்க வேண்டும். இது தொடர்பாக இணையத்தில் அதிக அளவு உதவிகள் கிடைக்கின்றன. எனினும் தமிழில்  குறைவு.
பிளாக்கர் நண்பன் தளத்தில் இது தொடர்பான ஆரம்ப படிகளை உள்ளது. http://www.bloggernanban.com/2012/04/authorship-markup.html இங்கே சென்று அந்த செயன்முறையை பின்பற்றி http://www.google.com/webmasters/tools/richsnippets   இல் உறுதிப்படுத்திய பின்னர்  தொடருங்கள்.

நட்சத்திரங்களை இணைப்பது எப்படி?

இதை wordpress தளங்களில் இலகுவாக செய்யலாம். ஆனால் blogger இல் ஒவ்வொரு விமர்சனம் எழுதும் போதும் நீங்களாக இதை செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இலகுவான முறை தான்.

1. முதலில் பதிவை எழுதி முடியுங்கள்.
2. இப்போது இந்த Script வரிகளை கவனியுங்கள்..

இதை பிரதி செய்து  ஒரு Notepad.txt file ஆக சேமித்து வையுங்கள் . தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

Name-Of-Product

Reviewed by Reviewer-Name-Here
on Aug 11 2012

Rating: Your-Stars/span>

•  Name-Of-Product-: நீங்கள் விமர்சிக்கும் பொருள் Eg:துப்பாக்கி
• Reviewer-Name-Here: உங்கள் பெயர் Eg: xxxxx
• Aug 11 2012 : விமர்சன திகதி Eg: 2012-11-08
• Your-Stars: நீங்கள் வழங்கும் நட்சத்திரம் Eg: 3

இதை எங்கே இணைப்பது?

இந்த படத்தை பாருங்கள்.

விளங்கி இருக்கும் என்று நினைக்கிறேன். பதிவின் முடிவில் இணையுங்கள்.
இதை இணைந்து சில பொழுதுகளில் உங்கள் rating காட்சியாகும். நீங்களாக இயங்குதா என பார்க்க Google Rich Snippets Tool இல் விரும்பினால் பாருங்கள்.

இது இயங்கும் போது எப்படி இருக்கும்?

இதை விட மேலும் இதை வடிவமைக்க விரும்பும் Code Developing  இல் ஆர்வம்  உள்ளவர்கள் http://support.google.com/webmasters/bin/answer.py?hl=en&answer=172705 இல் சென்று உங்கள் விருப்பம் போல விரும்பிய நட்சத்திரங்கள் அல்லது அடையாளங்களை இட்டு வடிவமைத்து கொள்ளலாம்.