Home » , » அட்சென்ஸ் - அட் ப்லோக்கர் - அனல்ய்டிக் Adsense - Ad Blocker - Analytic

நீண்ட நாட்களின் பின்னர் Google Analytic தொடர்பான பதிவில் சந்திக்கிறேன். தலைப்பை பார்த்து தடுமாறுகிறீர்களா? அதன் அர்த்தம், Google Adsense  பாவனையாளர்களின் எதிரி ஆகிய அட் ப்லோக்கரை பயன்படுத்தும் பாவனையாளர்களை Google Analytic  மூலம் கண்டறிதல் ஆகும். கண்டறிந்து என்ன செய்வது? இவர்களை தடுக்க வேண்டாமா? தடுக்கும் முறைகள்  பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் இதற்கு முதல் Adblock  பாவனையாளர்களை உங்கள் பக்கங்களில் இருந்து தடை செய்வது குறித்து பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவில் குறிப்பிட்ட முறை காலபோக்கில் புதிய Browers versions  இல் இயங்குவது நின்று விட்டது. இப்போது பல புதிய முறைகள் அறிமுகமாகி உள்ளது.


சில அறிமுகங்கள்:

Google Adsense


இதை அறியாதவர்கள் இல்லை.. Google  க்கு வருமானம் தரும் முக்கிய வழி.. பதிபவர்களுக்கும் தான்.. பல கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒரு சேவை..

Google Analytic


தமக்கென ஒரு வலைப்பூ அல்லது இணைய பக்கம் கொண்ட அனைவரும் பயன்படுத்தும் சேவை. கணணிக்கல்லூரிக்கு வரும் வாசகர்கள் அனைவரும் அறிந்த ஒரு பயனுள்ள Goolge  ஆல் வழங்கப்படும் இச்சேவை இலவசமாக கிடைப்பது ஆச்சரியமானது. இதன் மூலம் வாசகர்களது நடத்தைகளை துல்லியமாக கண்காணிக்க முடியும்.


Adblocker

முன்பு பெரும்பாலும் அறியப்படாத ஒன்று.. இன்று கொஞ்சம் கொஞ்சமாக இதன் பாவனை அதிகரித்து வருகிறது. இது ஒரு Browsers க்கான  Extention  ஆகும் . இதன் மூலம் விளம்பரங்களை மட்டும் இணைய பக்கங்களில் வடி கட்ட முடியும. இதன் மூலம் பக்கங்கள் தரவிறக்க வேகம் அதிகரிப்பதுடன், browsers உறுதியாக தொழிடற்படவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் தேவை அற்ற விட்ஜெட்கள், மட்டும் ஏனைய elements களை முடக்கவும் முடியும்.

adblocker இயங்கும் நிலையில் Goolge Adsense (மற்றும் ஏனைய விளம்பர சேவைகள்) விளம்பரங்கள் காட்சி படுத்த படாது. பெரும்பாலும் Google 1000 பக்க பார்வைகளுக்கு குறித்த பணத்தை வழங்குகிறது. இதனால் இந்த வருமானம் பதிபவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. அத்துடன் விளம்பரங்கள் தோன்றாததால் அவற்றை கிளிக் செய்வதற்கான சந்தர்ப்பமும் 0 ஆகிறது. மொத்தத்தில் Adsense வருமானம் முடக்கபடுகிறது.

adblocker இயக்கத்தை நிறுத்த பல வழிகள் உள்ளன. அதற்க்கு முதல் உங்கள் வாசகர்களில் எத்தனை பேர் இதை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறிய வேண்டும். அதற்கு வழிகாட்டுவதே இப்பதிவின் நோக்கம். அதிகளவு வாசகர்கள் இதை பயன்படுத்தினால் நிச்சயம் நீங்கள் Adblocker இயக்கத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

என்ன அவசியம்?

  • Google Analytic  கணக்கு அவசியம்
  • Google Adsense அவசியம் இல்லை 

எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?


  • Blogger, Wordpress CMS, Jooma  CMS  மற்றும் எவ்வகையான இணைய பக்கங்களிலும்.


மற்றவர்கள் இந்த ஸ்க்ரிப்ட்டை </body> க்கு மேலே இட்டு சேமியுங்கள் 

இதை எவ்வாறு நிறுவுவது?


மிக மிக இலகுவானது..
Blogger  பாவனையாளர்கள் கீழே உள்ள Button இனை Click  செய்து ஒரு Widjet ஆக நிறுவி கொள்ளுங்கள்.(Google analytics இணைக்க பட்டு இருக்க வேண்டும். உதவிக்கு இத்தளத்தில் தேடுங்கள்)


இது எவ்வாறு இயங்குகிறது?

இது ஒவ்வொரு தடவையும் உங்கள் பக்கம் தரவிறக்கப்படும் போது இயங்க ஆரம்பிக்கிறது. adblock தொடர்பான தகவல்களை Event ஆகவும் ஒரு Varible ஆகவும் பதிகிறது. Varible ஆக பதிவதால் தனியான வரைபில் இதை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.Event பகுதி மொத்தம் எத்தனை தடவை Adblock இயங்கியது என்ற தகவலை தருகிறது. இதை பற்றி அதிகம் இங்கு ஆராயவில்லை. 

இதன் Reports எங்கே பார்வை இடுவது?

இந்த காணொளியை பாருங்கள். அல்லது தொடர்ந்து வாசியுங்கள்.




இதை இரு இடங்களில் பார்வை இடலாம் .
  1. Google Analytics > Content> Event > Full report > Adblocker   இந்த பாதையில் சென்றால் மொத்தமாக Adblocker உடன், இல்லாமல் பக்க பார்வைகளை காணலாம்.
  2. Google Analytics >Audience > Custom > Custom Variables இல் சென்றால் நேரடியாக Adblocker பாவித்த வாசகர்களின் எண்ணிக்கையை காணலாம் 
இவ் Custom varible மூலம்  வரைபை உருவாக்கி ஒப்பிட 
  1. Advance > Overview இல் சென்று மேலே உள்ள பகுதியில் Advanced Segments என்ற தெரிவில் கிளிக் செய்து  New Custom Segment இல்  Include , Custom Variable (Value 01),  Containing, Yes என்று தெரிவு செய்து  விரும்பிய பெயரில் (Adblocker) சேமித்து கொள்ளுங்கள்.
  2. இப்போது மீண்டும் Advance > Overview > Advanced Segments இல் சென்று Adblokcer இலும், Total  Visiters  இலும் சரி அடையலாம் இட்டால் மொத்த பக்க பார்வைக்கும், adblocker பார்வையாளருக்கும் இடையிலான வரைபை கணிக்க முடியும் .

தரவுகளை கொண்டு என்ன செய்வது?


உங்கள் பார்வையாளர்களில் குறிப்பிட்ட தக்க அளவு சதவீதம் adblocker பாவித்தால் நிச்சயம் நீங்கள் அதை தடுக்க வேண்டும். இவர்கள் உங்கள் மொத்த revenue இல் செல்வாக்கு செலுத்துவார்கள். என்னுடைய தரவுகளை கொண்டு பார்க்கும் போது இவர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறார்கள்.

எவ்வாறு தடை செய்யலாம்?


இந்த பதிவு நீண்டு விட்டது. அத்துடன் நீங்கள் தரவுகளை சேகரிக்க  கால அவகாசம் தேவை. எனவே அடுத்த பதிவில் இது பற்றி பார்ப்போம். 


இந்த Script, adblockdetector.com  தளத்தில் இருந்து பெற்ற scriptஇன் மீள் அமைக்கபட்ட வடிவம்.
நன்றி: adblockdetector.com