Home » » கணனியில் தாஜ்மஹாலின் அழகை ரசிப்போம்

தாஜ்மஹால் என்றவுடன் சட்டென்று ஞாபகம் வருவது கட்டிட கலை. யாருக்குத்தான் இதை நேரில் சென்று பார்த்து வர விருப்பம் இல்லை?ஆனால் அந்த சந்தர்ப்பம் பல மக்களுக்கு கிடைப்பது இல்லை. இந்த தாஜ்மஹால் பற்றி முதலில் கொஞ்சம் பார்ப்போம். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.
ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தாஜ் மஹால் அமில மழையால் மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது. அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தாஜ்ம ஹாலைச் சுற்றி உள்ள 10,400 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள அனைத்து தொழிலகங்களும் நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவையே பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டது.

சரி இவ்வளவு சிறப்பு மிக்க தாஜ்மஹாலை நீங்களும் இங்கே கணனியில் சுற்றி பாருங்கள். இலவசமாக...

நீங்களே எங்கள் உலகம்!