Home » » இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தை கணனியில் சுற்றிப்பார்ப்போம்

அருங்காட்சியகங்கள், அறிவியல், கலை, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்துகின்றன. இக் கண்காட்சிகள், நிலையானவையாகவோ அல்லது தறகாலிகமானவையாகவோ இருக்கலாம். பெரிய அருங்காட்சியகங்கள், உலகின் பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன.பல அருங்காட்சியகங்கள் அவை அமைந்துள்ள பகுதிகளின் பண்பாடுகளின் மீது குறிப்பான கவனம் செலுத்துகின்றன. பெரும்பாலான அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருட்களைத் தொட்டுப்பார்க்க அனுமதிப்பதில்லை எனினும் சில அருங்காட்சியகங்களில் சில பொருட்களைத் தொட்டுத் தொடர்பாடுதல் ஊக்குவிக்கப்படுகின்றது.


இந்த வகையில் இந்திய நாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் கூகிள் துணையுடன் நாம் ஒரு மெய்நிகர் பயணத்தை உங்களுக்கு கணணி கல்லூரியில் ஏற்படுத்தி தந்து உள்ளோம். இந்த அருங்காட்சியகம் முழுவதையும் ஒரே நாளில் பார்ப்பது சாத்தியமற்றதாகும்.  இங்கே அனைத்து தளங்களையும் சாதரணமான அம்புக்குறி அசைவுடன் நகர்ந்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு ஒரு பயனுள்ள பயண அனுபவமாக இருக்கும். சாதரனமானவர்களால் தலை நகர் சென்று இதை சுற்றி  பார்ப்பட்து இயலாத காரியம். நீங்கள் மட்டும் அல்ல உங்கள் குழந்தைகளுக்கும் பயனுள்ளது. இப்படங்கள் அண்மையில் தான் படமாக்கப்பட்டு virtual tour உருவாக்கப்பட்டு உள்ளது. நீங்களும் சென்று பாருங்கள் .

நீங்களே எங்கள் உலகம்