Home » » இணையத்தில் Olympic நிகழ்வுகள்- HD ஒளிபரப்பு

இணைய வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த Youtube மற்றும் ஒலிம்பிக் சமேளனம் இணைந்து ஆசிய ஆபிரிக்க நாடுகளில் July 27 அன்று தொடங்குள்ள ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்ப தயாராகி வருகின்றனர். HD தொழிநுட்பத்துடன் ஸ்ட்ரீமிங் முறையில் அனைவரையும் உள்ளடக்கி இந்த ஒளிபரப்பு ஆரம்பிக்க படவுள்ளது. 10 வழிகளின் ஊடாக 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இலவசமாக ஒளிபரப்ப உள்ளதாக அவர்கள் தகவல் வெளியிட்டு ள்ளனர்.


Afghanistan, Bangladesh, Brunei, Bhutan, Cambodia, East Timor, India, Indonesia, Iran, Laos, Malaysia, Maldives, Mauritius, Mongolia, Myanmar, Nepal, Pakistan, Papua New Guinea, Singapore, Sri Lanka, Thailand  Vietnam ஆகிய நாட்டு மக்களே இதை இலவசமாக பார்வை இடக்கூடியதாக இருக்கும். இந்நாடுகளே டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை இன்னும் பெறவில்லை.

இவ் பரிச்சார்த்த ஒளிபரப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இதில் முன்னைய கால வீடியோகள் ஒளிபரப்ப படுகின்றன. இதை நீங்களே பாருங்கள்.




இவை 27 to August 12 வரை காலை 9- இரவு 11 வரை லண்டன் நேர படி ஒளிபரப்பாக உள்ளது. இவ் ஒளிபரப்பு நேரடியாக பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு வரபிரசாதம். எவ்வித விளம்பரங்களும் அற்ற HD வீடியோ மூலம் காணும் அனுபவத்திற்கு தயாராகுங்கள். குறிப்பாக திறப்பு விழா, மற்றும் மூடு விழா தொழிநுட்பத்தின் உச்சத்தினை பறைசாற்றும் வகையில் இருக்கும் என்பதை அனைவரும் எதிர்பார்க்கலாம்.

அடுத்து ஒரு சிறிய விபரணம்:




மேலும் சில புகைப்படங்கள்:



ஒத்திகை:




நீங்களே எங்கள் உலகம்