செந்தமிழ் நாப்பழக்கம் , சித்திரம் கைப்பழக்கம்.. நாம் அனைவரும் எப்போதாவது ஒரு தடவை படம் வரைந்து இருப்போம், அது முன்பள்ளியிலும் சரி, அல்லது நமது குழந்தை கேட்கும் போதிலும் சரி.. ஓவியம் ஓவியமாக இருந்திருப்பதுண்டா? "வசீகரா"விஜய் (Dr?) போல இல்லாவிடினும் "காதலா காதலா " உலக நாயகன் போல வாழத் தெரிந்தாலும் பரவாய் இல்லை, ஒன்றுமே இல்லாமல் உங்கள் ஆசிரியரை / காதலியை / பிள்ளையை எவ்வாறு சமாளிக்க போகிறீர்கள்?
அந்த வகையில் உங்களுக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பது போல சொல்லி தரும் ஒரு இணையதளத்தை பற்றி இந்தவார இணையம் பகுதியில் பார்ப்போம்.
நீங்கள் கீழே பார்க்கும் இணைய தளம் தான் அது.ஓவியம் வரைவதற்கு போட்டோஷாப், பெயிண்ட், கோரல் டிரா(Coral Draw) போன்று நிறைய மென்பொருள்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக இயற்கையான முறையில் ஓவியம் வரைவதற்கு இவை எவையும் கற்று தருவது இல்லை .
இந்த இணைய தளத்தில் மொத்தம் 24 *13 பாட நெறிகள் உள்ளன. எவ்வித அடிப்படை அறிவும் இல்லாம் கூட இங்கே பழக ஆரம்பியுங்கள். தூரிகை பிடிப்பது முதல் முகம் வரைதல் வரை அனைத்தையும் பொறுமையுடன் அழகாக சொல்லி தருகிறார்கள்.
அது சரி, வரைவதற்கு வரை பலகைக்கு எங்கே போவது? அதையும் நாம் இலவசமாக தருகிறோம். இப்பதிவின் கீழே மொத்தம் மூன்று பலகைகள் உள்ளன. நீங்கள் விரும்பிய பலகையில் வரைந்து பழகுங்கள். வரைந்த படத்தை சேமிக்கும் வசதியும் உண்டு,
பழத்தை உரித்து தருகிறோம், உண்ண மறுக்கலாமா?
எமது ஏனைய சேவைகளுக்கு முகப்பிற்கு விஜயம் செய்க.
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள். இவை எமது எதிர்கால பதிவுகளை சிறப்பிக்கும் .
Home
»
»
ஓவியம் வரைய கற்றுதரும் இலவச இணைய தளம்