Home » » நீங்கள் கருப்பா? இங்கே வெள்ளையாக மாறலாம்...!

Before face retouchகருப்பா இருக்கிற பசங்களை பொண்ணுங்க காதலிக்க மாட்டங்க என்னு எவண்டா சொன்னது? என்று நாயகன் காமெராவை பாக்க முடியாம சொன்ன இந்த பிஞ்சு போன பஞ் கொஞ்ச நாளைக்கு முன்னாடி திரையில் வலம் வந்தது. ஏமா என்ன கருப்பா பெத்தா? உன் கருப்பு என் தலை முடில, இப்படி கருப்பு நாயகர்கள் சொல்லுமளவிற்கு இதில் என்ன இருக்கிறது? எதோ இருக்கிறது.. அது எல்லாம் எமக்கு என்ன?. முன்பு ஒரு படத்தில் வெள்ளை பெயிண்ட் அடித்து கவுண்ட மணியை ஏமாற்றியது நினைவுக்கு வருகிறது.


After face retouch
ஆயிரம் முறை “போய் சொல்லி” ஒரு திருமணம் நடத்தி வைக்கலாம் எண்டதை எங்கள் தில்லு முள்ளுக்கு சப்போர்ட்டா ஆயிரம் பொய் சொல்லி நடத்தலாம் என்று மாத்தி எத்தனையோ பேர் வாழ்க்கையை கிணற்றில் தள்ளி விட்டு இருக்கிறோம். இப்ப எல்லாம் புளோரசண் துகள்கள் கொண்ட பவுடர் போட்டால் போதும் சூரிய ஒளியில் தக தக என்னு மின்னலாம். ஸ்கின் கான்சர் வருதோ இல்லையோ இப்-போதைக்கு எது வரணுமோ அது வரும் \. உங்கள் புகைப்படங்களில் நிறத்தை மாற்றும் முறைகளை பலர் அறிந்து இருப்பீர்கள்..இதற்கு போட்டோ சோப் பயன்படும். எனினும் இவற்றில் மிகுந்த நுணுக்கத்துடன் பணியாற்ற வேண்டும். சிறந்த அனுபவசாலிகளால் மாத்திரம் முடிகிறது. அண்மையில் கூட ஒரு பெண் வரலாற்று கருப்பு வெள்ளை படங்களுக்கு வர்ணம் கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருந்தார். இவ்வாறு நிறங்களை பிரதி இடுவது சிக்கலானது.


 இதை இலகுவாக செய்து முடிக்க பல மென்பொருட்கள் இணையத்தில் உள்ளன. எனினும் ஒரு சில குறிப்பிட்டு சொல்லும்படியாக ஆன்லைனில் கிடைக்கின்றன

.அவற்றில் இரண்டை இங்கே இலவசமாக பயன்படுத்துங்கள். உங்கள் தோலின் பகுதிகளை சுட்டிகாட்டி அதில் நீங்க எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ் வண்ணத்தையும் தெரிவு செய்யுங்கள். அப்புறம் என்ன.. publish பண்ண வேண்டியதுதான்.. இதில் இன்னொரு வசதி இணையத்தில் உள்ள படங்களையும் கூட அப்படியே எடிட் பண்ணலாம்.

பின்வரும் இணைப்புகளில் இவற்றை செய்து பாருங்கள் :

  1. fotoflexer.com
  2. makeup.pho.to