Home » » இங்கே நீங்களூம் தற்காலத்திற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்யலாம்- Modern Remix

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர்.
சில காலம் முன்பு ஒரு கவிஞர் கூட, Remix  என்பது ஒருவன் எடுத்த சத்தியை மீண்டும் கிளறி உண்பது போன்றது என்று கருத்து வெளியிட்டு இருந்தார்.
ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.
ரீமிக்ஸ் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லும் இந்த கட்டுரை இசை உலகில் Magnetic Tape  மூலம் அறிமுகமான தொழில்நுட்பமே ரீமிக்ஸ் கலைக்கும் வாய்ப்பளித்ததாக தெரிவிக்கிறது.
இசையில் மட்டும் அல்ல கலையிலும் இலக்கியத்திலும் கூட ரீமிக்ஸ் இருப்பதாக இந்த கட்டுரை சொல்கிறது.
இவை ஒரு புறம் இருக்க இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு ரசிகர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு.ரீமிக்ஸ் மூலம் ரசிகர்களூக்கு தாங்கள் ரசிக்கும் பாடல்கள் மீது கூடுதல் உரிமை கிடைக்கிறது.
இந்த கருத்தில் உங்களூக்கும் உடன்பாடு இருந்து நீங்களும் ரீமிக்ஸ் செய்ய விரும்பினால் கணணி கல்லூரி அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
கணணிக்கல்லூரியில் இசைப்பிரியர்கள் தாங்கள் விரும்பும் எந்த பாடலையும் இஷ்டம் போல ரீமிக்ஸ் செய்யலாம்.
முதலில் குறித்த பாடலை இங்குள்ள பொருத்தமான பகுதியில் பதிவு ஏற்றுங்கள்.
அதன் பிறகு அந்த பாடலில் விரும்பிய ஒலிகளை சேர்த்து அவற்றின் அளவை ஏற்றி இறக்கி முற்றிலும் புதிய பாடலை உருவாக்கி கொள்ளலாம்.நீங்கள் ரீமிக்ஸ் செய்த பாடலை இந்த தளத்திலேயே கேட்டி ரசிப்பதோடு அதனை பேஸ்புக் டிவிட்டர் வழியே நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளவதோடு தரவிரக்கியும் கொள்ளலாம்.
அதிகளவு பணம் கொடுத்து அல்லது திருட்டுத்தனமாக Adobe Audition  போன்ற மென்பொருட்களை தரவிறக்கி பயன்படுத்துவதை விட இது எவ்வளோ மேலானது. தெரிஞ்சுகொண்டும் தப்பு செய்யாதிங்க!
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 
ரீமிக்ஸ் செய்த பாடல் ஒன்று: