தமிழ் - தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் போன்றவர்களையும் விக்கிக்கு பங்களிப்பு செய்யத் தூண்டுவதற்குமாக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது....
விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது அனைவராலும் முடிவதில்லை. கிடைக்கும் நேரம் அரிதாக இருப்பதும், கட்டுரை எழுதுவதில் ஆர்வமின்மையும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் படம் எடுப்பது சிலருக்கு எழுதுவதிலும் பார்க்க எளிய விசயமாக இருக்கலாம். மேலும் நீங்கள் ஏற்கனவே எடுத்த தரமான படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள் உங்களிடம் இருக்கலாம். தற்போது தரவேற்ற முறையும் மிகவும் எளிதாகி இருக்கின்றது. எனவே நீங்களும் இலகுவாக இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். அதன்மூலம் தமிழ் விக்கித் திட்டங்களில் உங்கள் பங்களிப்பும் இடம்பெறும்....
விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் கோப்புகளைப் பதிவேற்றுவதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியா மட்டுமன்றி பிற மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்சனரி, விக்கிநூல்கள், விக்கிசெய்திகள் போன்ற பிற விக்கித் திட்டங்களிலும் இக்கோப்புகளைப் பயன்படுத்தலாம்.
விதிகள்
- பதிவேற்றப்படும் கோப்புகள் பதிவேற்றுபவரது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்டவை இனங்காணப்பட்டு உடனடியாக நீக்கப்படும். (மேலும் காண்க விக்கிப்பீடியா:பதிப்புரிமை)
- ஒருவர் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது.
- போட்டி காலம்: நவம்பர் 15, 2011 - பெப்ரவரி 29, 2012
- கோப்புகள் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றப்படவேண்டும். இதற்காக காமன்சின் தரவேற்ற வழிகாட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் இவ்விணைப்பினைப் பயன்படுத்தி தங்கள் கோப்புகளைப் பதிவேற்ற வேண்டும். தரவேற்ற வழிமுறைகளுக்குக் இப்பக்கத்தைக் காண்க.
- பரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்: தமிழ் - தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவையாக இருத்தல் வேண்டும். பின்வரும் வகை ஊடகங்கள் பதிவேற்றப்படலாம்
- தமிழர் வாழிடங்கள் தொடர்பான படங்கள்
- தமிழர், தமிழியல் தொடர்புடையோர் படங்கள்
- தமிழர் மரபுச் சின்னங்களின் படங்கள்
- தமிழ் நிறுவனங்களின் படங்கள்
- தமிழர் நிலச்சூழல், உயிரினங்களின் படங்கள்
- தமிழர் பாரம்பரியக் களங்கள் - கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் போன்றவற்றின் படங்கள்
- தமிழில் கல்விவளங்கள்; தமிழ்வழிக் கல்விக்கு பயன்படக்கூடிய ஊடகங்கள் அனைத்தும் - தமிழில் விளக்கம் உள்ள வரைபடங்கள், நிலப்படங்கள், கணித, அறிவியல் படங்கள், அட்டவணைகள், விளக்கப்படங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்படக் கோப்புகள்
- தமிழ்ச் சொற்களின் ஒலிப்பு/உச்சரிப்புக் கோப்புகள்
- தமிழ் இலக்கியப் பாடல்களின் ஒலிக் கோப்புகள்.
- தமிழர் பண்பாட்டு ஊடகப் பதிவுகள் (தமிழ் நாட்டார் பாடல்கள், ஆடல், பாடல், சடங்குகள், மற்றும் கிராமியக் கலைகள், விளையாட்டுகள் போன்றவற்றின் ஒலி/ஒளிக் கோப்புகள்)
- ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.
- பதிவேற்றக் கூடிய கோப்பு முறைகள்:
- புகைப்படம் -- jpg, png, svg, xcf, TIFF
- நிகழ்படம் -- .ogg theora (.ogv)
- அசைப்படம் -- .gif
- ஒலிக்கோப்புகள் ogg vorbis (.ogg), .midi
- பரிசுக்குத் தகுதியான கோப்புக்களின் தேர்வு நயம் 50%, பயன்பாடு 50% எனப் புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.
- பதிவேற்றப்படும் கோப்புகள் படைப்பாக்கப் பொதுமங்களின் குறிப்பிடுதல் - இலாப நோக்கமற்ற - அதே மாதிரிப் பகிர்தல் 3.0 (CC-BY-SA 3.0) உரிமத்தின் அடிப்படையில் பதிவேற்றப்படும்.
பரிசுகள்
- முதல் பரிசு: 200 அமெரிக்க டாலர்கள்
- இரண்டாம் பரிசு : 100 அமெரிக்க டாலர்கள்
- மூன்றாம் பரிசு : 50 அமெரிக்க டாலர்கள்
- ஆறுதல் பரிசுகள்: 25 X 2 = 50 அமெரிக்க டாலர்கள்
- தொடர் பங்காளிப்பாளர் பரிசுகள் : 100 X 3 = 300 அமெரிக்க டாலர்கள்
- சிறப்புப் பரிசு: 150 அமெரிக்க டாலர்கள் (தமிழர் தொழிற்கலைகள் ஆவணங்கள்: படம், நிகழ்படம், வரைபடம், ஒலிக்கோப்பு)
- பரிசு பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். பரிசு பெற்ற ஆக்கங்கள் தமிழ் விக்கித் திட்டங்களின் முதற்பக்கங்களில் காட்சிப்படுத்தப்படும்.
- ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
- பரிசுகள் பொதுமை கருதி அமெரிக்க டாலர்களில் அறிவிக்கப்பட்டாலும், கையிருப்பு இந்திய ரூபாய்களில் உள்ளது. எனவே நாணய மாற்று விகித்தில் ஏற்படும் மாற்றங்களால் போட்டி முடிந்த பின் (மார்ச் 2012) வழங்கப்படும் பரிசுத் தொகையில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.
தரவேற்றம்
- கோப்புகள் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றப்படவேண்டும்.
- விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் கணக்கொன்றை ஏற்படுத்தி அதனைக் கொண்டு புகுபதிகை செய்யவும்
- பின்வரும் இணைப்பினை சொடுக்கி, கோப்புகளைப் பதிவேற்றவும்:
தரவேற்றக் கையேடு
கோப்பு உதவி
-
ஒலி நிகழ்படம்/காணொளி புகைப்படம் தேவையான கோப்பு முறை .ogg (Ogg vorbis) மற்றும் .midi .ogv (Ogg theora) .jpg, .svg, .png, .gif மாற்றும் இலவச மென்பொருள் Audacity ffmpeg2theora, Firefogg, Miro Video Converter inkscape, gimp, photoscape உதவிப் பக்கங்கள் ஒலிக்கோப்பு உதவி நிகழ்படக் கோப்பு உதவி புகைப்பட உதவி
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கோப்புக்கள்
- பதிவேற்றக் கூடிய கோப்பு முறைகள் எவை?
-
- காமன்சில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைகள்
- mp3, mpeg, avi போன்ற கோப்பு முறைகளைப் பதிவேற்ற முடியாதா?
-
- முடியாது. இவை திறமூல கோப்பு முறைகளல்ல. காமன்ஸ் திறமூல கோப்பு முறைகளையே ஏற்கிறது. ஆனால் இவற்றை தேவையான கோப்பு முறைகளுக்கு எளிதாக மாற்ற முடியும்.
-
- ஒலிக்கோப்புகளுக்கு - .ogg (Ogg vorbis) மற்றும் .midi கோப்பு முறைகள் தேவை. நேரடியாக இவற்றை உருவாக்க இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. .mp3 போன்ற கோப்புகளை .ogg கோப்புகளாக மாற்ற Audacity என்ற இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம். ஒலிக்கோப்புகள் பற்றி மேலும் உதவிக்கு இப்பக்கத்தைக் காணவும்
-
- நிகழ்பட / காணொளி கோப்புகளுக்கு - .ogv (Ogg theora) கோப்பு முறைகள் தேவை. .avi, mpeg போன்ற கோப்புகளை .ogv கோப்புகளாக மாற்ற பல இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவது பற்றிய உதவிக் குறிப்புகளுக்கு இப்பக்கத்தைக் காணவும்
-
ஒலி நிகழ்படம்/காணொளி தேவையான கோப்பு முறை .ogg (Ogg vorbis) மற்றும் .midi .ogv (Ogg theora) மாற்றும் இலவச மென்பொருள் Audacity ffmpeg2theora, Firefogg, Miro Video Converter உதவிப் பக்கங்கள் ஒலிக்கோப்பு உதவி நிகழ்படக் கோப்பு உதவி
- கோப்பினைப் பதிவேற்றிவிட்டேன். ஆனால் அது சரியாகப் பதிவேறியதா என்று ஐயமாக உள்ளது. என்ன செய்வது?
-
- கோப்பை சரியாகப் பதிவேற்றியுள்ளீர்களா என்று ஐயமிருப்பின், உங்கள் பயனர் கணக்கின் பெயர் அல்லது பதிவேற்றிய கோப்பின் பெயரை tamil.wikipedia [at] gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்து விடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் அதனை ஆராய்ந்து உங்களுக்கு உதவுவர்.
சொந்த ஆக்கம்/பதிப்புரிமை
- சொந்த ஆக்கம் என்றால் என்ன?
-
- ஒருவர் தானாக உருவாக்கிய கோப்பே சொந்த ஆக்கம் எனப்படும் - ஒருவர் தானே எடுத்த புகைப்படம், நிகழ்ப்படம், பதிவுசெய்த ஒலிக்கோப்பு, உருவாக்கிய அசைப்படம் ஆகியவை சொந்த ஆக்கங்களாகும். ஏற்கனவே அச்சில் வெளியானவற்றை ஒளிநகல் எடுத்து உருவாக்கியவை, பிறரது கோப்புகளைஃபோட்டோஷாப் போன்ற மென்பொருட்கள் கொண்டு மாற்றி உருவாக்கியவை சொந்த ஆக்கங்கள் ஆகா.
- ஒருவரது சொந்த ஆக்கம், ஆனால் ஏற்கனவே வேறொரு ஊடகத்தில் பிரசுரமானது. அதை அவரே இப்போட்டிக்கு மீண்டும் சமர்ப்பிக்க முடியுமா? இது பதிப்புரிமை மீறலாகுமா?
-
- ஊடகப் பிரசுரம் இருவகைப்படும்:
- 1) ஊடகத்தில் பிரசுரம் மட்டும் நடந்திருக்கும். குறிப்பிட்ட கோப்புக்கான உரிமையை கோப்புக்கு சொந்தமானவர் வைத்திருப்பார். அவ்வாறிருப்பின் அந்தக் கோப்பைப் பதிவேற்றலாம். அதாவது கோப்புக்கான உரிமையை கோப்பை ஆக்கியவர் விற்றிருக்காத பட்சத்தில் முன்பு பிரசுரமானதாக இருந்தாலும், அவர் அதனைப் பதிவேற்றலாம்.
- 2) படத்துக்கான உரிமைகளை ஊடகம் மொத்தமாக வாங்கிவிட்டு பின்னர் பிரசுரிக்கும். அப்படியான நிலையில், பிரசுரத்துக்கு விற்றபின்னர் அது அவருடைய “சொந்த ஆக்கம்” கிடையாது. அவற்றைப் பதிவேற்ற இயலாது.
- பதிப்புரிமை அற்ற பழைய படங்களின் பிரதிகளை போட்டிக்குப் பதிவேற்றலாமா?
-
- கூடாது. போட்டி முழுக்க சொந்த ஆக்கங்களுக்கு மட்டுமே.
- ஏற்கனவே விக்கிப்பீடியா பொதுவில் பதிவேற்றிய ஆக்கங்களை மீளப் போட்டிக்குச் சமர்ப்பிக்கலாமா?
-
- ஏற்கனவே விக்கிப்பீடியா பொதுவிலோ அல்லது யாதாயினும் விக்கிப்பீடியா தளத்திலோ பதிவேற்றிய ஊடகத்தை போட்டிக்காக மீளச் சமர்ப்பிக்க முடியாது. போட்டித்தொடக்க நாளான நவம்பர் 15 இலிருந்து போட்டிக்காக சமர்ப்பிக்கும் ஆக்கமே ஏற்றுக் கொள்ளப்படும்.
பரிசுகள்
- ஒருவர் ஆகக் கூடியது எத்தனை பரிசுகளைப் பெறலாம்?
-
- ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
- ஒருவர் எத்தனை படங்களைப் பதிவேற்றலாம்? அவை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும்?
-
- ஒருவர் எத்தனை படங்களை வேண்டுமென்றாலும் பதிவேற்றலாம்; உச்ச வரம்பு கிடையாது. ஒருவரது ஒரே போலுள்ள அல்லது ஒரே தொடரில் அமையும் கோப்புகள் (எ.கா, ஒருவர் 100 தமிழ் உச்சரிப்பு ஒலிப்பு கோப்புகளைப் பதிவேற்றினால் அவற்றுக்குப் பொதுவான ஒரே மதிப்பீடு, அல்லது ஒரே இடத்தை ஒருவர் பலமுறை படமெடுத்திருந்தால் அவை ஒரே முறை மதிப்பிடப்படும்) பொதுவில் மதிப்பீடு செய்யப்படும். மற்றவை அனைத்தும் தனித்தனியாக ஐந்து நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படும்.
- நடுவர்கள் யார்?
-
- போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களான விக்கியர்கள் - சோடாபாட்டில், நற்கீரன், கலை, சஞ்சீவி சிவகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரே நடுவர்கள். அவர்களே பரிசு பெறும் ஆக்கங்களைத் தெர்ந்தெடுப்பர்.
- நடுவர்கள் போட்டியில் பங்கு பெறலாமா? அது ஆதாய முரண் ஆகாதா?
-
- நடுவர்கள் போட்டியில் பங்கு பெறலாம். ஆனால் அவர்களது கோப்புகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் கோப்புகளும் பரிசுகளுக்குத் தகுதியற்றவை. எனவே நடுவர்கள் ஒப்புச்சப்பாணிகளாக மட்டுமே பங்கேற்கலாம்.
தொடர்புகொள்ள
- ஏதாவது சந்தேகங்கள் ஏற்படின் யாரிடம் கேட்பது?
-
- [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதினால் உதவி கிடைக்கும்.
[email protected]
- [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதினால் உதவி கிடைக்கும்.