கணணி வாங்கி ஒராண்டு ஆகிவிட்டதும், கணணி வாங்கும் போது உடன் கொடுத்த Motherborad CD எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் Driver மென்பொருளை பக்அப் செய்து வைப்பதற்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது.
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக்கொண்டு நம் கணணியில் எளிதாக நிறுவலாம். இந்த மென்பொருளை இயக்கி வரும் வகைகளில் நமக்கு எந்த வகையான டிரைவர்(Audio, video,Lan, Modem) பக்அப் செய்ய வேண்டுமோ அதை சொடுக்கி Backup Drivers என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக தரவிறக்கலாம்.
உங்கள் கணணியுடன் வரும் Motherboard CD இல்லையென்றால் இனி இந்த இலவச மென்பொருளை தரவிறக்கி டிரைவர் பக்அப் செய்து வைத்துக் கொள்ளலாம்.