
Favicon.cc என்ற தளம் புதுமையான முறையில் ஃபெவிகான்களை உருவாக்க உதவுகிறது. இதில் நாமே நமக்கு வேண்டியவாறு ஃபெவிகானை வரைந்து கொள்ள முடியும். இந்த தளத்திற்குச் சென்றால் சிறுசிறு கட்டங்களால் வரைவதற்குத் தேவையான பகுதி காணப்படும். இதில் தேவையான வண்ணங்களை வைத்து எழுத்துகளாக அல்லது படங்களாக மவுசை வைத்து இழுத்து உருவாக்கலாம். நாம் வரைய வரைய கீழேயே அதன் முன்னோட்டம் தெரிந்து விடும்.
அனிமேட்டட் பெவிகான் உருவாக்க :
1. முதலில் இந்த தளத்திற்குச் சென்று வரையும் பகுதிக்குக் கீழே இருக்கும் Use Animation என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும். அதில் இப்போது Frame 1 of 1 என்று இருக்கும். அதாவது முதலில் வைக்கப்படும் படமாக எடுத்துக் கொள்ளப்படும். எதாவது உங்களுக்குப் பிடித்தமானவாறு வரைந்து கொள்ளவும். கால இடைவெளி ஒரு விநாடி என்று இருக்கும். அதிகமாக வேண்டுமெனில் மாற்றிக் கொள்ளலாம்.



இந்த இணையதளத்தில் அனிமேட்டட் ஃபெவிகான் தான் உருவாக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண வகையிலும் உருவாக்கிக் கொள்ளலாம்.
இணையதளம் : http://favicon.cc