Home » » அம்மாவின் டைரி Mother's diary - Game


அம்மாவின் டைரியில் கடந்த கால ரகசியங்கள் -அதற்குள் தவறாக நினைக்கவேண்டாம்.இந்த விளையாட்டின் ஆங்கில தலைப்பை தமிழில் மொழிபெயர்த்தேன்.அவ்வளவுதான். சற்று பெரிய விளையாட்டாக 235 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..

இதில் பெயர்-ஸ்கிரீன்செட்டிங்ஸ்-சவுண்ட் செட்டிங்ஸ் செட் செய்துகொள்ளுங்கள்.ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு இடத்தில் உங்களுக்கு அடுத்த லெவல் செல்வதற்கான க்ளு கிடைக்கும்.
கர்சரை படத்தில் கொண்டு செல்லும் சமயம் உங்கள் கர்சரானது கண்போன்று மாறிவிடும்.அந்த இடத்தில் உங்களுக்கான க்ளு கிடைக்கும். நீங்கள் படத்தை சற்று நேரம் பார்த்துகொண்டு இருந்தாலும் க்ளு இருக்கும் இடத்தில் நட்சத்திரம் மிண்ணுவதை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இந்த விளையாட்டில் வரும் ஒரு க்ளுவினை உங்களுக்கு சொல்கின்றேன். ஒரு இடத்தில் காலி பெக்கெட் இருக்கும. மற்றும ஒரு இடத்தில் குழாய் இருக்கும். குழாய் திறப்பதற்கான லிவர் நாம் கண்டுபிடிக்கவேண்டும்.பின்னர் குழாயை திறந்து பக்கெட்டில் தண்ணீர்பிடித்து பின்னர் துணியை ஒரு க்ளுவில் இருந்து கண்டுபிடித்து துணியை நனைத்து பின்னர் வேறு ஒரு இடத்தில்  இருக்கும் படத்தை துடைக்கவேண்டும். கிடைக்கும் க்ளு வேறு இடத்திற்கு பயன்படும்.அங்கு கிடைக்கும் க்ளுவை வைத்து வேறு இடத்தில் விளையாட்டினை தொடரவேண்டும்.குழந்தைகளுக்கு புரிந்துவிட்டால் பின்னர் தூள் கிளப்பிவிடுவார்கள். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்