Home » » ஆச்சரியம் மிக்க பயணம்: அண்டத்தில் மிக சிறியதில் இருந்து பெரியது வரை என்ன உள்ளது?

இது அண்டத்தில் என்ன இருக்கிறது? (updated) என்பதன் புதுப்பிக்கப்பட்ட பகுதியே ஆகும். இதை இதுவரை பார்க்காதவர்கள் சென்று பார்த்து விட்டு வாருங்கள். சரி விடயத்திற்கு வருவோம். அண்டத்தில் என்ன இருக்கிறது? அதில் நாம் எங்கு இருக்கிறோம்.. பிரபஞ்சத்தின் எல்லைகளை இன்னும் யாரும் முழுமையாக நமக்குக் காட்டவில்லை. ஆனால் இதில் அடங்கியுள்ளவை குறித்து நாம் பல தகவல்களைக் கொண்டுள்ளோம். பல தகவல்கள் நாம் அறிந்து ஒத்துக் கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. சில இன்னும் அனுமானத்திலேயே உள்ளன.
நாள் தோறும் ஏதேனும் ஒரு புதிய தகவலை, இந்தப் பிரபஞ்சம் குறித்து நமக்கு விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தந்துகொண்டுள்ளனர். இவை அனைத்தையும் ஓரிடத்தில் நாம் தெரிந்து கொள்ள முடியுமா? சற்று சிரமம்தான். உங்களுக்காக நாம் இந்த சந்தர்ப்பத்தை  தருகிறோம்.

மிகப்பெரியத்தில் இருந்து மிக சிறியது வரை அனைத்துமே குட்டி குட்டி விளக்கங்களுடன் அழகாக சொல்லி இருக்கிறார்கள்:
உங்கள் மவுஸின் சக்கரத்தைச் சுழற்றி,நாம் பிரபஞ்சத்தின் உள்ளும் வெளியுமாகச் செல்ல முடியும். இதில் உயிரினங்கள், பொருட்கள், அண்ட சராசரங்களில் உள்ள கோளங்கள் என எத்தனையோ காட்டப்படுகின்றன. ஏதாவது ஒன்று குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா! உடனே கர்சரை அந்தப் பொருள் அருகே கொண்டு சென்று நிறுத்துங்கள். உடனே சிறிய கட்டத்தில் அந்தப் பொருள் குறித்த விளக்கம் கிடைக்கும். பிரபஞ்ச வெளியில் நாம் ஓர் அற்பப் பதர் என்ற எண்ணம் உருவாகிறது. இருப்பினும் நாம் ஓர் அதிசய உருவாக்கம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

இங்கே சென்று இந்த ஆச்சரியத்தை பாருங்கள்:


அண்டத்தில் சிறியதில் இருந்து பெரியது வரை ஆச்சரியம் மிக்க பயணம்