அன்டார்க்டிக்கா (Antarctica) பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். மேலும் கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இங்கு சிறிதளவான முள்ளந்தண்டுளி வகைகளே உள்ளன. உதாரணமாகப் பென்குயின்கள் மற்றும் நீலத்திமிங்கிலங்களைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான சிறப்பு நிறைந்த அந்தாட்டிக்கா கண்டத்திற்கு நீங்களும் சென்று வரலாம்-உங்கள் கணணி மூலம். இங்கே சென்று இக்கண்டத்தின் பூரண தோற்ற அம்சங்கள், உயிரினங்கள், வீடுகள், மக்கள் என அனைத்தையும் மெய் நிகர் சுற்றுலா ஊடாக கண்டு மகிழுங்கள்.
இங்கே சென்று பாருங்கள்: குளிர் நிறைந்த அந்தாடிக்காவிற்கு குளுகுளு பயணம்- Virtual Tour
Home
»
Street view
»
குளிர் நிறைந்த அந்தாடிக்காவிற்கு குளுகுளு பயணம்- Virtual Tour