அமெரிக்க தற்போதைய அதிபர் பரக் ஒபாமாவின் வாழ்க்கை மிகவும் அழகானது. சுவசுவாரசியமானது. நான் தினமும் காணும் கும்பிடு போடும் அரசியல் வாதிகளிடம் இருந்து ம்மிகவும் வேறுபட்டது. ஒரு வல்லரசின் தலைவர் சாதாரணமானவர் அல்ல. மிகுந்த நிர்வாக திறமை, ஓர்ஒருங்கிணைக்கும் ஆற்றல், கட்டுப்படுத்தும் திறன், பதிலளிக்கும் கடப்பாடு இப்படி நிறையவே உள்ளன. இவர் எவ்வாறு தனது வாழ்வில் எப்படி படி படியாக முன்னேறினார் என்பதை இந்த விவரணம் அழகாக படம் பிடித்து காட்டுகிறது. இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடையங்கள் நிறையவே உண்டு.
நீங்கள் சாதரணமாக இவருடைய வரலாற்றை புத்தகங்களில் வாசித்து இருப்பீர்கள், தொலைகாட்சிகளில் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இது வித்தியாசமானது. இயங்குகின்ற விவரணமாக அமைந்து ஒபாமாவின் கடந்த கால வாழ்கையை சிறப்பாக ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது.