Home » » பதிபவர்களுக்கு அவசியமான HTML Compressor

அண்மை காலமாக பல பதிபவர்களது பிரச்சனை, பல ஜாவா ஸ்கிரிப்ட் இயங்காமை, தளம் பூரணமாக தரவிறங்காமை, படங்கள் வெட்டுப்படுதல், பக்க அமைப்பு சிதைவடைதல் இப்படி பலவற்றை அடுக்கிகொண்டே போகலாம். இதற்க்கு பிரதான காரணம், தொழிநுட்ப பதிபவர்கள், தமது தளத்திற்கு வருகையை கூட்ட ஆங்கில தளங்களில் வெளியாகும் widgetகளை மொழி பெயர்த்து அப்படியே "அப்படி இப்படி" என்று ஆரவாரத்துடன் பதிவிடுவார்கள், இவற்றை ஒன்றும் அறியா அப்பாவிகள் நீங்கள் அழகு என்று நினைத்து உங்கள் தளங்களில் தொங்க விடுவீர்கள். சில நாட்களின் பின்பு குறித்த செயல் நிரல் செயல் இழக்கலாம். அல்லது நீங்கள் நீக்கும் போது அதன் எச்ச சொச்சங்கள் நீங்காது விடலாம்.இதை விட மழை காளான்களாகிய புதிய திரட்டிகளின் ஓட்டு பட்டையை இணைத்தல் போன்ற செயல்கள் உங்கள் தளத்தை மோசமாக பாதிக்கின்றன.

இது தொடர்பாக ஒரு இணைய தளம் தனது கருத்துகளை பகிர்கிறது.

கணணிக்கல்லூரி தன்னுடைய அனுபவத்தை இவ்வாறு விபரிக்கிறது: 
என்னுடைய நிர்வாகிகள் என்னில் மிகுந்த அக்கறை உடையவர்கள், அன்புள்ளவர்கள், அவர்களின் அன்பே எனக்கு இடையூறானது. என்னை தன்னுடைய உலாவியில் புரள விடுபவர்களை கண்காணிக்கவும், என்னில் இருந்து பிரதி எடுப்பதை கண்காணித்து தடுக்கவும் பல கேடயங்களை உருவாக்கி விட்டனர்.  இதுவே நான் அவர்களை சென்றடைவதில் கால தாமதம் ஏற்படுத்தியது.  தரவிறங்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த அவர்கள் என்னுடலை பரிசோதித்தனர். அப்போது தான் என்னில் தேவை அற்ற இடைவெளிகள், உதவாத பாதுக்காப்பு அணிகலன்கள் இப்படி பலவற்றை நான் மறைத்து வைத்து இருப்பதை அறிந்தனர். உடனடியாகவே என்னை மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை இலவச அளித்தனர். அவர்களின் சிகிச்சை பலனளித்தது. இன்று நான் சுறுசுறுப்பாக என்னுடைய வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறேன்.

கணணிக்கல்லூரி தன்னுடைய அனுபவத்தை மேலும் இவ்வாறு விபரிக்கிறது,,
ஆரம்பத்தில் 1MB அளவான எனது உடலுடன், 8 செக்கன்களில் அரைகுறையாக  தரவிறங்கிய என்னை  மருத்துவர் இப்போது 0.5MB உடனும் , 3 செக்கன்களிலும் பூரணமாக தரவிறங்க வழி வகுத்து விட்டார். இப்போது நீங்கள் கூட என்னுடைய இந்த புதிய மாற்றத்தை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறீர்கள். இது என்னுடைய பழைய நிலைமையின் 80%  முன்னேற்றமாகும்.
நான் இதை ஏன் உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் தெரியுமா? என்னை போன்ற பலர் இவ்வாறு அல்லல் படுகிறார்கள். என் நிர்வாகிகளாவது பரவாயில்லை. ஆனால் என்னை போன்ற இன்னும் பல தளங்கள் அதிக பருமனால் உங்களை போன்றவர்களால் வெறுத்து ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறான தளங்களில் நிர்வாகிகள் பணத்தை மட்டும் அடிப்படையாக கொண்டவர்கள். எம் உடல் நிலை பற்றி சிந்திப்பதில்லை. 
நீங்களும் உங்கள் தளங்கள் மேல் அன்பு செலுத்துபவரா?...........


உங்களுக்கு இந்த பேட்டியே போதும் என்று நினைக்கிறேன்.  இந்த இலவச  மருத்துவர் யார்?

இவர் தனி ஒருவர் இல்லை. இவர்களில் ஒருவரை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
இவர்தான் HTML Compressor! இவரை பற்றி இணையத்தில் தேடினால் பலர் இருப்பார்கள். ஆனால் இவர்கள் பயனற்றவர்கள். உங்கள் வலைப்பூவிற்கு என்று ஒருவர் இருக்கிறார். இலவசமாக. HTML Compressor என்றால் என்ன?
இதன் பயன்பாடு என்ன?
"The online HTML Compressor is used to compress HTML code by removing unnecessary white spaces, line breaks, tabs and other extra objects. Results in highly compressed HTML." இவ்வரிகள் உங்களுக்கு புரிந்து இருக்கும்.

இம்மருத்துவரை இங்கே சென்று அணுகுங்கள்.. HTML Compressor


இத் தளத்தைஉபயோகிப்பது எப்படி?
இதற்கான விளக்கமும் அங்கே தமிழில் உள்ளது!உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!