Home » , » Adblockers மூலம் Adsense வருமானம் பாதிக்கப்படுவதை உங்கள் வலைப்பூவில் தடை செய்வது எப்படி?

stop ad blockingஅட்சென்ஸ் மூலம் சராசரியாக பிரபல தமிழ் தளங்கள் தினமும் 20$ வரை உழைக்கிறார்கள்.  இப்போது தான் மிக இலகுவாக தமிழ் தளங்களுக்கு அட்சென்ஸ் கிடைக்கிறதே. எனவே நீங்கள் கூட இத் தொகையை தாண்டி உழைக்கும் ஒரு பதிபவராக இருக்கலாம். அண்மை காலங்களில் உங்கள் வருவாய் குறைகிறதா? ஆம் எனில் நிச்சயம் அட் ப்லோக்கர் - Ad-blocker எனப்படும் மென்பொருள் அல்லது add-on அல்லது Extension எனப்படும் அட்சென்ஸ் அல்லது அது போன்ற விளம்பரங்களை உங்கள் உலாவியில் தடை செய்யும்   ஒரு செயலியின் விளைவாக தான் இருக்கும். இச்செயலியின் பயன்பாடு அண்மை காலங்களில் தமிழ் வாசகர்கள் இடையே அதிகரித்து உள்ளது.உங்கள் தளங்களுக்கும் வருபவர்கள் இதை பயன்படுத்துகிறார்களா? என கண்டறிய நாளாந்த அனல்ய்டிக்  அறிக்கையையும் உங்கள் அட்சென்ஸ் அறிக்கையையும் ஒப்பிட்டால் தெரியும். பக்க பார்வைகள் பாரிய மாற்றத்தை கொண்டது எனில்  ad-blocker தான் காரணம். 


இப்போது விடயத்துக்கு வருவோம். இவ்வாறான செயலிகள் கஷ்டபட்டு கண் விழித்து பதிவு எழுதி சம்பாதிக்கும் உங்களை எரிச்சலுக்கு உள்ளாக்கின்றன. இதை பல வழிகள் மூலம் தடை செய்யலாம்.

  1. கண்டு கொள்ளாமல் விடலாம். - நீங்களே அட்சென்ஸ்சை ஏமாற்றி நீங்களாகவே கிளிக் செய்து உழைப்பவர் எனில் இதை பற்றி கவலையை விடுங்கள்.
  2. வாசகர்களின் காலில் விழா குறையாக கெஞ்சி கேட்கலாம். (இது தொடர்பாக கீழே காணுங்கள்)
  3. இவற்றால் கண்டறிய முடியாத ஸ்கிரிப்ட் மூலம் இயங்கலாம் (இது கோடிங் தெரிந்தவர்களுக்கே பொருந்தும். இங்கே இது பற்றி எதுவும் தேவை இல்லை என நினைக்கிறேன்.)
  4. வருபவர்களை வலுக்கட்டாயமாக adblockerகளை செயலிழக்க செய்யலாம். இது பற்றி விரிவாக பார்ப்போம்.

1.வாசகர்களின் காலில் விழா குறையாக கெஞ்சி கேட்கலாம்..

வாசகர்களின் காலில் விழா குறையாக கெஞ்சி கேட்கலாம் அல்லது பயமுறுத்தலாம். ஆனால் இதனால் நல்ல மனம் உள்ள கொடை வள்ளல் இணங்கலாம். அப்படி யார் தான் இருக்கிறார்கள். ஆனாலும் தவறுதலாக இந்த ad-blocker மூலம் சில செயல் நிரல்கள் இயக்கம் தடை பட்டால் இச்செய்தி உதவலாம். 
எனக்கு இது தான் பிடிக்கும் என்பவர்களுக்கு இதோ அதை நிறுவும் முறை:
அதற்கு முதல் இது எப்படி இயங்குகிறது? உங்கள் தளத்தில் ad blocker காணப்பட்டால் நீங்கள் பதிந்து வைத்த செய்தி எச்சரிக்கை ஆக தோன்றும். அதை க்ளோஸ் செய்து விட்டு வாசகர் தமது வேலையை பார்க்க போவார்.
வழமையான முறையில் உங்கள் பிளாக்கர் டேம்ப்ல்டை எடிட் செய்யும் பகுதி ஊடாக திறவுங்கள் ( blogger.com>layout> template > edit html)

முதலில் இதை தேடி கண்டு பிடியுங்கள்:


இதை அதற்கு மேலே பிரதி இடுங்கள் (copy below and paste above)


இதை தேடி கண்டு பிடியுங்கள்:


இதை அதற்கு மேலே பிரதி இடுங்கள் (copy below and paste above):
இதை நீங்கள் எடிட் செய்து விரும்பியவாறு எச்சரிக்களாம். ஆனால் தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துங்கள் 


இதை தேடி கண்டு பிடியுங்கள்:

இதை அதற்கு மேலே பிரதி இடுங்கள் (copy below and paste above)

இப்போது அதை save (templete) செய்யுங்கள்.

இனி என்ன உங்கள் வாசகர் ஒவ்வொரு தடவையும் இந்த எச்சரிக்கையை பெறுவார். இதனால் ஒன்றும் ஆக போவதில்லை.

நீங்களும் இந்த ad blocker  பாவிக்கும் ஒருவர் எனில் இந்த தளத்தில் (tamilinfographics.blogspot.com) சென்று பாருங்கள். மேலே சொன்ன செய்தி கிடைக்கும்.

அடுத்து 

2.வாசகர்களை வலுக்கட்டாயமாக ad blocker செயற்பாட்டை நிறுத்த வைத்தல்.

why adblock is badஇது உங்களுக்கு பயனுள்ளது. வாசிப்பவருக்கு கட்டாயம் விளம்பரங்கள் தோன்றும். ஆனால் வாசகர் எங்காவது தமிழ் மூலம் தகவல் தரும் அரைகுறை   தொழிநுட்ப தளங்களின் ஆசை வார்த்தையில் எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமல் ஒரே கிளிக் மூலம் இதை நிறுவி இருப்பின் அவரால் எப்போதுமே இதை (ad-blocker) எப்போதுமே நிறுத்த முடியாது போய் விடும். மொத்தத்தில் அவரால் உங்கள் தளத்தை அடையவே முடியாது போகும். அதை விட வாசிக்கும் ஆர்வத்தில் வருபவர் கோபப்படவும் வாய்ப்புக்கள் உண்டு. 

எனக்கு இது தான் பிடிக்கும் என்பவர்களுக்கு இதோ அதை நிறுவும் முறை:
அதற்கு முதல் இது எப்படி இயங்குகிறது? உங்கள் தளத்தில் ad blocker காணப்பட்டால் உடனடியாக உங்கள் தளம் மூடப்பட்டு வேறு எச்சரிக்கை பகுதிக்கு செலுத்தப்படுவார். வழமையான முறையில் உங்கள் பிளாக்கர் டேம்ப்ல்டை எடிட் செய்யும் பகுதி ஊடாக திறவுங்கள் ( blogger.com>layout> template > edit html)


இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் காணுங்கள். (இது வரை வெளியிடப்படவில்லை- விரைவில் )