Home » , » Google Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல்- Google Indexing - Google Web Master

Google Webmaster Tools என்பது மிக பிரபலமான SEO கருவிகளில் ஒன்றாகும். இதன் மூலமே அனைத்து தளங்களையும் தனது search பகுதியில் இணைக்கிறது. அது மட்டும் அல்ல தொழிநுட்ப ஆதரவு, malware களிடம் பாதுகாப்பு என பல வகையான சேவைகளை இலவமாக வழங்குகிறது. இது தொடர்பாக விரிவாக பார்ப்போம்.
இதற்கு முன்னர் Google Analytic தொடர்பாக பதிவிட்டேன். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கூகிள் Webmaster தொடர்பாக தொடர்கிறேன். இவ்வளவு காலமும் எந்த கருத்துரைகளும் இல்லாமல் இருந்த போது நிறைய எழுதினேன். இப்பொழுது பலத்த ஆதரவு இருந்தும் (யார் கண் பட்டதோ) தொடர்ந்து எழுத முடியவில்லை. முடிந்தவரை உங்கள் ஆதரவுடன் தமிழில் தொழிநுட்பத்தை வழங்க முயல்கிறேன்.

கூகிள் வெப் மாஸ்டர் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

 1. உங்கள் தளங்கள் கூகிள் தேடுதலில் முன்னுரிமை பெரும்.
 2. இவ்வாறு தேடப்பட்டு கிடைக்கும் உங்கள் பார்வையாளர் எண்ணிக்கை மூலமே கூகிள் பேஜ் ரேங்க் கணிக்கப்படும். இதுவே உங்கள் அட்சென்ஸ் அனுமதியில் செல்வாக்கு செலுத்துவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
 3. உங்க வலை பக்கத்தில் உள்ள அனைத்து HTML குறைபாடுகள், இறந்து போன இணைப்புக்கள்,  பக்க பிழைகள் என அனைத்தும் சுட்டிக்காட்டப்படும்.
 4. உங்கள் தளங்கள் seach பகுதியில் இணைக்கப்படுவதை கண்காணித்தல்.
 5. தீய செயலிகளில் இருந்து உங்கள் தளங்களை அடையாளப்படுத்தல்
இதை விட இன்னுமிருக்கிறது.

நான் இப்பதிவில் Google Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல் தொடர்பாக கலந்துரையாடுகிறேன்.

Google Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல்

இதற்கு முதலில் நீங்கள் வெப் மாஸ்டர் உடன் இணைய வேண்டும்.
 • https://www.google.com/webmasters இங்கே செல்லுங்கள்.
 • அடுத்து உங்கள் வலைப்பூவை இணைக்க வேண்டும். 
 1. முதலில் Add Site ஊடக உங்கள் வலைப்பூ முகவரியை உள்ளிடுங்கள்.
அடுத்து இத்தளம் உங்களுடையது தான் என்று உறுதி படுத்த வேண்டும்.
 1. இதற்கு Alternative Methord பகுதியில் சென்று  "Add a Meta Tag" என்பதை தெரிவு செய்ய உங்களுக்கு  கீழே உள்ளது போல meta tag தரப்படும்.
Meta Tag Verification Google Webmaster Tools
 • இப்போது இந்த meta tagகை பிரதி எடுத்து விட்டு உங்கள் வலைப்பூவில் Template > Edit HTML > ஊடாக சென்று <head> இன் கீழே பிரதி செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.
 • மீண்டும் வெப் மாஸ்டர் பக்கம் வந்து verify செய்து கொள்ளுங்கள்.
 • இப்போது உங்கள் தளம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
இதன் பின்  Optimization பகுதியின் ஊடாக சென்று sitemaps இல் சென்று Add site map என்பதை தெரிவு செய்து "  /feeds/posts/default?orderby=UPDATED  " என்பதை கொடுங்கள்.
ஓரிரு நாட்களின் பின்னர் மீண்டும் வந்து பாருங்கள். அவர்கள் நீங்கள் சுட்டு சுட்டு போடாமல் சொந்தமாக எழுதிய அனைத்தையும் தமது seach பகுதியில் index செய்து இருப்பார்கள்.
இன்னும் சில நாட்களில் உங்கள் தளம் தொடர்பாக பின்வரும் அறிக்கைகள் கிடைக்க ஆரம்பிக்கும்.

இது தொடர்பாக பின்வரும் படங்களை பாருங்கள். அனைத்தும் புரிந்து விடும்.


Google Page Indexing என்பதே இதன் முக்கிய பயன்பாடாகும். இதை விட ஏனைய பயன்பாடுகள் தொடர்பாக அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதன் பயனை நம்பாவிடின் இங்கே கணணி என்பதற்கான தேடல் முடிவுகளை பாருங்கள். இல்லாவிடின் இப் படத்தை பாருங்கள். எனினும் ஆங்கில தளங்களை இவ்வாறு இணைத்து விட்டு முதல் பத்தில் எதிர்பார்ப்பது முட்டாள் தனம். இலட்சக்கணக்கான மில்லியன் கணக்கான தளங்களில் நீங்கள் முன்னுரிமை பெறுவது இமாலய சாதனை. எனினும் சில பதிபவர்கள்  இதை செய்து காட்டி இருக்கிறார்கள்.


அத்துடன் இது விரைவானதும் கூட. இதோ, இப்பதிவுவை  உடனடியாகவே கூகிள் இன்டெக்ஸ் செய்து விட்டது.

நீங்கள் கூகிள் Analytic பாவனையாளர் எனில் இதை விட இன்னும் சிறப்பான அட்டவணைகள் மூலம் இன்னும் பல தகவல்களை பெற முடியும் என்பது சிறப்பு தகவல்.நாளடைவில் உங்கள் தளங்கள் தமிழ் தேடும் சொற்களில் முன்னுரிமை பெற்று விடும். பேஜ் ரேங்க் அதிகரிக்கும். திரட்டிகளை பயன்படுத்தாதவர்களுக்கும் உங்கள் தளங்கள் சென்றடையும். அண்மையில் கூட ஒரு பிரபல விஞ்ஞான பேராசிரியருடன் கதைக்கும் போது அவருக்கு தெரிந்தது எல்லாம் விக்கிபீடியா , encyclopedia , Google search மட்டுமே. வலைப்பூக்களை பற்றியோ அல்லது திரட்டிகள் பற்றியோ பதிபவர்கள் இடையே நடக்கும் வாய்க்கால் தகராறுகள் பற்றியோ தெரியவில்லை (தெரிஞ்சா கிழிஞ்சிடும்). இவ்வாறானவர்களுக்கு இதை  அறிமுகப்படுத்த இவை தான் வழி.

இன்னும் ஒரு பதிவில் பிங், மற்றும் யாஹூ seach இயந்திரங்களில் உங்கள் தளங்களை இணைப்பது தொடர்பாகவும் பார்ப்போம்.