Bing Webmaster Tools என்பது மிக பிரபலமான SEO கருவிகளில் ஒன்றாகும். இதன் மூலமே அனைத்து தளங்களையும் தனது மற்றும் யாஹூவின் search பகுதியில் இணைக்கிறது. அது மட்டும் அல்ல தொழிநுட்ப ஆதரவு, malware களிடம் பாதுகாப்பு, Keyword Research Link Explorer Fetch as Bingbot Markup Validator, SEO Analyzer என பல வகையான சேவைகளை இலவமாக வழங்குகிறது. இது தொடர்பாக விரிவாக பார்ப்போம்.
இதற்கு முன்னர் Google Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல்- Google Indexing - Google Web Master தொடர்பாக பதிவிட்டேன். தொடர்ந்து Bing Webmaster தொடர்பாக தொடர்கிறேன். இவ்வளவு காலமும் எந்த கருத்துரைகளும் இல்லாமல் இருந்த போது நிறைய எழுதினேன். இப்பொழுது பலத்த ஆதரவு இருந்தும் தொடர்ந்து எழுத முடியவில்லை. முடிந்தவரை தமிழில் தொழிநுட்பத்தை வழங்க முயல்கிறேன்.
Bing Webmaster மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- உங்கள் தளங்கள் Bing, Yahoo தேடுதலில் முன்னுரிமை பெரும்..
- உங்க வலை பக்கத்தில் உள்ள அனைத்து HTML குறைபாடுகள், இறந்து போன இணைப்புக்கள், பக்க பிழைகள் என அனைத்தும் சுட்டிக்காட்டப்படும்.
- உங்கள் தளங்கள் seach பகுதியில் இணைக்கப்படுவதை கண்காணித்தல்.
- தீய செயலிகளில் இருந்து உங்கள் தளங்களை அடையாளப்படுத்தல்
இதை விட இன்னுமிருக்கிறது.
நான் இப்பதிவில் Bing & Yahoo Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல் தொடர்பாக கலந்துரையாடுகிறேன்.
இது கூகிள் தரும் சேவையை விட கொஞ்சம் சிறப்பானது. எனினும் பெரும்பான்மை தமிழர்கள் இத் தேடும் பொறியை பயன்படுத்துவது இல்லை. இதை நான் எனது நாளாந்த அறிக்கையில் இருந்தே பெற்றேன். அதை விட துரதிஸ்டவசமாக இச்சேவையை பயன்படுத்த உங்களிடம் hotmail கணக்கு அவசியமாகிறது.
Bing & Yahoo Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல்
இதற்கு முதலில் நீங்கள் வெப் மாஸ்டர் உடன் இணைய வேண்டும்.
- https://ssl.bing.com/webmaster/இங்கே செல்லுங்கள்.
- அடுத்து உங்கள் வலைப்பூவை இணைக்க வேண்டும்.
- முதலில் Add Site ஊடக உங்கள் வலைப்பூ முகவரியை உள்ளிடுங்கள்.
அடுத்து இத்தளம் உங்களுடையது தான் என்று உறுதி படுத்த வேண்டும். "Add a Meta Tag" என்பதை தெரிவு செய்ய உங்களுக்கு கீழே உள்ளது போல meta tag தரப்படும்.
- இப்போது இந்த meta tagகை பிரதி எடுத்து விட்டு உங்கள் வலைப்பூவில் Template > Edit HTML > ஊடாக சென்று <head> இன் கீழே பிரதி செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.
- மீண்டும் வெப் மாஸ்டர் பக்கம் வந்து verify செய்து கொள்ளுங்கள்.
- இப்போது உங்கள் தளம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
இனி எவ்வாறு உங்கள் தளத்தை அவர்களின் தேடல் பொறியில் இணைப்பது என்று பார்ப்போம்.
- முதலில் https://ssl.bing.com/webmaster/ ஊடாக சென்று Optimization பகுதியின் ஊடாக சென்று sitemaps இல் சென்று Add site map என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள் .
- அடுத்து உங்கள் வலைப்பூவின் பெயருடன் சேர்த்து /atom.xml?redirect=false&start-index=1&max-results=1000 இதை கொடுங்கள்.
http://tamilinfographics.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=1000.
- இப்போது submit செய்தால் எல்லாம் முடித்து விட்டது. கீழே விளக்க படம்.
இது கூகிள் வெப் மாஸ்டர் இல் இருந்து வேறு பட்டது.
ஓரிரு வாரங்களின் பின்னர் மீண்டும் வந்து பாருங்கள். அவர்கள் நீங்கள் சொந்தமாக எழுதிய அனைத்தையும் தமது seach பகுதியில் index செய்து இருப்பார்கள்.
இன்னும் சில நாட்களில் உங்கள் தளம் தொடர்பாக பின்வரும் அறிக்கைகள் கிடைக்க ஆரம்பிக்கும்.
இது தொடர்பாக பின்வரும் படங்களை பாருங்கள். அனைத்தும் புரிந்து விடும்.
நாளடைவில் உங்கள் தளங்கள் தமிழ் தேடும் சொற்களில் முன்னுரிமை பெற்று விடும். திரட்டிகளை பயன்படுத்தாதவர்களுக்கும் உங்கள் தளங்கள் சென்றடையும்.
இந்த பிங் வெப் மாஸ்டர்இல் இன்னும் இருக்கிறது. தொடர்ந்து என்னுடன் இணைந்து இருங்கள்.
இன்னும் ஒரு பதிவில் SEO என்றால் என்ன? கூகிள், பிங், மற்றும் யாஹூ seach தளங்களில் SEO தொடர்பாகவும் பார்ப்போம்.