உங்கள் அனைவரிடமும் பழைய கணணிகள் இருக்கலாம்? பழசா? நூற்றாண்டு கால பழமையா? இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு முதல் வாங்கி இப்போது வந்துள்ள மென்பொருட்களுக்கு ஈடு கொடுக்காது உள்ள கணணிகள். இதை பழைய சாமனாக எறிவதா? இல்லை அருங்காட்சியகமாக உங்கள் வீட்டில் பாதுகாப்பதா? இல்லை ஏதாவது தொண்டு நிறுவங்கள் மூலம் பின் தங்கிய பாடசாலைகள் அல்லது இவ்வாறான பரிதாபகரமான நிறுவங்களுக்கு கொடுப்பதா? எது எவ்வாறாயினும், முதலில் உங்கள் பழைய கணணியை உயிர்ப்பிக்க வேண்டும். இதுக்கு என்ன செய்யலாம். Open Source OS ஆகிய உபுண்டு உடன் கைகோர்ப்போம். இங்கே உள்ள கை நூல் உங்களுக்கு உங்கள் பழைய கணணியை எவ்வாறு உயிர் கொடுத்து இயங்க வைப்பது என்பதை தெளிவாக சொல்லி தருகிறது.
நீங்களும் இங்கே சென்று இதை தரவிறக்கி வாசித்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!