Home » » பதிவின் எப்பகுதி அதிகளவில் எவ்வளவு தூரம் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் - Google Analytic 5

Do people actually read content?Google Analytic தொடர் மாபெரும் உங்கள் ஆர்வத்தால் 5ம் பாகத்தை எட்டி உள்ளது. இன்று இப்பதிவின் ஊடாக நாம் என்ன பார்க்க போகிறோம்? இதன் நன்மை என்ன? Advanced Content Tracking என அழைக்கப்படும் இது, பொதுவாக கட்டுரை பதிவுகள், கவிதைகள் எழுதுபவர்களுக்கு அவசியமானது. இதன் மூலம் அவர்கள் உடைய ஆக்கங்கள் யாரெல்லாம் வாசித்தார்கள், எதை விரும்பினார்கள், இப்படியான தகவல்களை பெற்று தம்மை மதிப்பிட பயன்படுத்திக்கொள்ளாம். அவர்களுக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு பதிபவருக்குமே இது அவசியம். உதாரணத்திற்கு அவர்களை சொன்னேன். இலவசமாக கிடைக்கும் இந்த கூகுளின் சேவையை பயன்படுத்தும் முறை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.
நான் தினமும் நூற்றுகணக்கான தமிழ் வலைத்தளங்களையும் வலைபூக்களையும்  பார்வை இடுகிறேன். அவற்றில் 2% குறைந்தவைகளை Google Analytic அடிப்படை சேவையை பயன்படுத்துவதை என்னால் அவதானிக்க முடிகிறது. எவருமே (தொழிநுட்ப பதிபவர்கள் உட்பட ) இவ்வாறு அட்வான்ஸான விடயங்களை பயன்படுத்தி கண்டதில்லை. ஆனால் தங்கள் ஆக்கங்களை பிரதி எடுக்கிறார்கள் என்று கவலை பட்டு பதிவிடுகிறார்கள்.

பார்வையை கூட்ட வழிகள், இன்று மட்டும் இலவசம், ஹாக்கிங் இப்படி பல தகவல்களை போடுகிறார்கள். ஆனால் இதை எத்தனை பேர் தரவிறக்கினார்கள் என்றோ யாரெல்லாம் வாசித்தார்கள் என்றோ அறிவதில்லை. தொழிநுட்ப தகவல்களை தேடி வருபவர்கள் மீண்டும் அத்தளத்திற்கு வர மாட்டார்கள்.

இத்தளம் அவ்வாறான ஒன்றல்ல. இங்கு வரும் பார்வையாளர் ஆகிய உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு உங்களால் விரும்பப்படும் தகவலை மாத்திரமே இத்தளம் தருகிறது.

இப்போது நாம் பதிவின் நோக்கமான "பதிவின் எப்பகுதியில் ஆரம்பித்து எவ்வளவு தூரம் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் " இணைப்பது தொடர்பாக பார்ப்போம்.

இதற்கு  முதல் நீங்கள் என்னுடைய முன்னைய Google Analytic  தொடர்களை வாசித்து Google Analytic இணை செயற்படுத்தி இருக்க வேண்டும்.

 இவற்றை  வாசிக்கவிடின் முதலில் வாசித்த பின்பு மீண்டும் வாருங்கள்.


இதன் அறிக்கை எப்படி இருக்கும்?


இப் படங்களை பாருங்கள்:

Reading actions in Google Analytics


Reading actions in Google Analytics


Page level interaction metrics in Google Analytics.

Time to action measurements in Google Analytics


இப்போது எனது அறிக்கையை பாருங்கள்:



நான் இணைத்த உடன் எடுத்த ஸ்க்ரீன் ஷாட் என்பதால் அதிகளவில் புள்ளி விவரங்களை பெற முடியவில்லை.


இதன் மூலம் என்ன பெறலாம்?

தினமும் பக்கத்தை பார்க்கும் பார்வையாளர்கள்,
எந்த பக்கத்தை பார்த்தார்கள், எப் பகுதியை அதிகளவில் பார்த்தார்கள், எங்கிருந்து வெளியேறினார்கள் என்பதை பெறலாம்.
அதை விட முன்னைய பதிவுகளில் குறிப்பிட்ட படி  வந்தவர்கள் எதை பிரதி எடுத்தார்கள், எதை திருடினார்கள், எப்படி திருடினார்கள் என்பதை பெறலாம்.


இதை நிறுவ என்ன செய்ய வேண்டும்?

மிக மிக இலகுவானது. கீழே  கிளிக் செய்து சாதாரண விட்ஜெட் ஆக உங்கள் dashboard layoutஇல்  சேமியுங்கள். அவ்வளவு தான். இனி உங்கள் analytics அறிக்கையை பார்வை இடுங்கள். ஆச்சரியம் மிக்க மாற்றத்தை கண்டு வியப்பீர்கள்

                                


உங்கள் பூரண அறிக்கை சில மணித்தியாலங்களில் கிடைக்க தொடங்கி விடும்.இது தொடர்பான சந்தேகங்களை என்னிடம் கேட்கலாம்.
அடுத்த பதிவில்  தனியான plugin உடன் இவ் சேவையை இணைத்து வேறுபட்ட வடிவில் அறிக்கைகளை பெறும் முறையை பார்ப்போம்.

இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்



இதன் சுருக்கப்பட்ட வடிவம் : (ONLY for code developers)