Home » » நேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்

தான் எடுத்துக் காட்டும் போட்டோக்களுக்கு உலக அளவில் புகழ் பெற்ற மீடியா நிறுவனம் நேஷனல் ஜியாக்ரபிக். இதன் இணைய தளத்தில் ஒவ்வொரு மாதமும், பூமிக் கோளத்தில் கிடைக்கும் அபூர்வ காட்சிகளையும், வாழும் மனிதர்களின் அபூர்வ நிலைகளையும் போட்டோக்களாக எடுத்துகாட்டுகிறது. இவை ஒவ்வொன்றும் அற்புதமானவை.http://ngm.nationalgeographic.com/visionsofearth/visionsearth2011என்ற முகவரியில் உள்ள இந்த தளத்தில் நுழைந்தவுடன், போட்டோக்கள் வரிசையாக, ஒரு ஸ்லைட் ÷ஷாவாகாக் காட்டப்படுகின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்க அம்புக் குறி வழிகள் தரப்பட்டுள்ளன. இப்படியே ஒவ்வொரு தொகுதியாக நாம் பெற்று பார்க்கலாம். இப்போது பார்த்தால், இந்த மாத தொகுதி தோன்றும். அம்புக் குறிகளைக் கிளிக் செய்து பார்த்தால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட போட்டோ தொகுதி வரை கிடைக்கும். 
முந்தைய ஆண்டுகள் காட்டப்பட்ட போட்டோக்கள் பார்க்க விருப்பம் இருந்தால், நேவிகேஷன் ஸ்ட்ரிப்பில் ஆண்டினை அமைத்து கிளிக் செய்தால், அந்த ஆண்டுக்குரிய போட்டோக்கள் கிடைக்கும். இப்படியே 2006 ஆம் ஆண்டு தொடங்கி, இன்றைய மாத தொகுதிகள் வரை நாம் காணலாம். ஒவ்வொரு போட்டோவினையும், ஆஹா! இப்படியா!! என வியப்போடு நம் விழிகளைச் சில கணங்கள் தேக்கி வைக்கலாம். அதுதான் நேஷனல் ஜியோக்ரபிக் நிறுவனத்தின் சிறப்பு.