Home » » புதிய வசதிகளுடன் Yahoo Seach Engine

இணையத்தில் ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருந்த யாஹூ தளம் கடந்த சில வருடங்களாக அடி வாங்கத் தொடங்கியது. கூகுள் VS யாஹூ என்று நடந்துக் கொண்டிருந்த போட்டி தற்போது கூகுள் VS பேஸ்புக் என்று மாறிவிட்டது.
சமீபத்திய யாஹூவின் தோல்வியால் அதனை மைக்ரோசாப்ட், கூகுள், ஏ.ஓ.எல் போன்ற நிறுவனங்கள் விலைக்கு வாங்க முயற்சித்தன. இந்நிலையில் யாஹூ தளம் தனது தேடுபொறியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

Yahoo Recipes: யாஹூவில் சமையல் குறிப்புகளை தேடினால் பல்வேறு புகைப்படங்களுடன் எளிதில் புரியும் வகையில் காட்டுகிறது.
தேடும் போது recipe என்பதனையும் சேர்த்து தேட வேண்டும். இதன் மூலம் நாம் தேடும் ரெசிபிகளை எளிதாக கண்டுக் கொள்ளலாம்.
மேலும் அந்த படத்தில் Show Ingredients & Time என்பதை கிளிக் செய்தால் அந்த ரெசிபியை செய்ய தேவையான பொருட்களையும், எவ்வளவு நேரம் ஆகும் என்பதனையும் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் அந்த ரெசிபிகளில் நமக்கு பிடித்தவைகளை பேஸ்புக்கில் பகிரும் வசதியையும் தந்துள்ளது. Add to Share என்ற பெட்டியில் தேர்வு செய்து எத்தனை ரெசிபிகளை வேண்டுமானாலும் பேஸ்புக்கில் பகிரலாம்.
ரெசிபிகளை தேடுபொறியில் தேடும்போது தேவைப்படும் பொருட்கள், நேரம் போன்றவற்றை தேடல் முடிவில் காட்டுவதை யாஹூ கூகுள் தளத்தை கொப்பி அடித்துள்ளது என்று நினைக்க வேண்டாம்.
கூகுள், யாஹூ, பிங் போன்ற முன்னணி தேடுபொறிகளால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட Schema என்ற நுட்பத்தில் ரெசிபிகளை கண்டுபிடிக்கும் வழி உள்ளது.
Yahoo Shopping: யாஹூ தேடலில் ஏதாவது தேடும் போது அது தொடர்பாக இணையத்தில் வாங்குவதற்கான தளங்களை தேடல் முடிவில் காட்டுகிறது. இதிலும் recipe போலவே படங்களாக காட்டுகிறது.
பேஸ்புக்கில் பகிரும் வசதியுடன் சேர்த்து ஒன்றுக்கும் மேற்பட்டவைகளை ஒப்பிடும் வசதியும் தந்துள்ளது.
நமக்கு பிடித்தவைகளை தேர்வு செய்து Compare என்பதை கிளிக் செய்தால் ஒப்பீட்டையும், Share என்பதை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் பகிரும் வசதியையும் காட்டுகிறது.
Yahoo Videos: யாஹூவில் வீடியோ ஏதாவது தேடினால் அது தொடர்பான வீடியோக்களை தேடல் முடிவில் காட்டும்.
அதில் நமக்கு பிடித்த வீடியோக்களை கிளிக் செய்தால் அதே பக்கத்திலேயே வீடியோவை முழு அளவில் பார்க்கலாம்.
இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், யூடியூப் போன்ற மற்ற வீடியோத் தளங்களில் உள்ள வீடியோக்களைப் பார்க்கலாம்.